வெளியே வரும் மக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது? – போலீசாருக்கு வழக்கறிஞர் எச்சரிக்கை

வெளியே வரும் மக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது? – போலீசாருக்கு வழக்கறிஞர் எச்சரிக்கை

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்பவர்களை ஏன், என்ன என்று விசாரிக்காமல் போலீசார் தாக்கி வருகின்றனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
பொது மக்களைத் தாக்கும் போலீசாருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பர் எச்சரக்கைவிடுத்துள்ளார்.

தடை உத்தரவை மீறி வெளியே வரும் மக்களை போலீசார் அடித்து விரட்டி வருகின்றனர். வழக்கு போடாமல் அடித்தால் போலீசார் மீது நீதிமன்றம், மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடரப்படும் என்று மூத்த வழக்கறிஞர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால், அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்பவர்களை ஏன், என்ன என்று விசாரிக்காமல் போலீசார் தாக்கி வருகின்றனர். இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
பொது மக்களைத் தாக்கும் போலீசாருக்கு உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பர் எச்சரக்கைவிடுத்துள்ளார்.

police beat civilization

இது குறித்து அவர் கூறுகையில், “தடையை மீறி வெளியே வருபவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 188 படி வழக்கு போட வேண்டும். அல்லது அட்வைஸ் செய்து அனுப்ப வேண்டும். இதைவிடுத்து பொது மக்களை அடிக்க யார் அதிகாரம் கொடுத்தது? எடப்பாடி பழனிசாமி அடிக்கச் சொன்னாரா அல்லது போலிஸ் டி.ஜி.பி திரிபாதி அடிக்கச் சொன்னாரா?
பொது மக்களை அடிக்கும் காட்சிகளை அப்படியே கொண்டு சென்று மனித உரிமை ஆணையத்தில் கொடுத்தால் நீங்கள் உங்கள் வேலையைவிட்டுப் போக வேண்டியிருக்கும். அல்லது சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் அடித்த அத்தனை பேரும் வேலையைவிட்டு தான் போக வேண்டும். அடிக்கும் அத்தனை பேரும் வீட்டுக்குப் போய்விடுவீர்கள். நான் நிச்சயம் பெட்டிஷன் போடுவேன். கொரோனா இருந்து வெளியே வந்தால் அவர்கள் மீது  269,270, 271 செக்‌ஷன் கீழ் வழக்கு பதிவு செய்யுங்கள். மற்றவர்கள் மீது 188 படி வழக்கு பதிவு செய்யுங்கள். மீறி அடித்தால் உங்கள் மீது 3ஏ, 3பி பிரிவு பாயும்” என்று கூறியுள்ளார்.