வெளியுலகத்திற்கு தெரியாத சோனியா காந்தியின் மறுபக்கம்…!

 

வெளியுலகத்திற்கு தெரியாத சோனியா காந்தியின் மறுபக்கம்…!

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியின் 73-வது பிறந்த நாள் இன்று (டிசம்பர் 9). சோனியா 1998-ஆம் ஆண்டு காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்டு 19 ஆண்டுகள் தன்னுடை நீண்ட பயணத்தை கடந்து 2017 ஆம் ஆண்டு தன் மகன் ராகுல் காந்தியிடம் பொறுப்பினை ஒப்படைத்தார். 

sonia

பிறகு 2019 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்ததால் ராகுல் தனது பதவியிலிருந்து விலகினார் இதனால் சோனியா மீண்டும் 2வது முறையாக தனது 20வருட இடைவெளியை அடுத்து கட்சியை வழிநடத்த தொடங்கினார். 

முன்னாள் பிரதமரும் தனது கணவருமான ராஜிவ் காந்தியின் இறப்பிற்கு பின்,  3 வருடங்கள் கடந்து 1994-ல் தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்தார். சோனியா. காங்கிரசின் தொடர்ச்சியான 2 வெற்றிகளானாலும் பாராட்ட பட்டார். மேலும், 2004-ல் சோனியா வேறுபட்ட 2 கட்சிகளையும் ஓன்றுசேர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கி, மேலும் பாஜாக கட்சியை அதிகாரத்திலிருந்து வெளியேற்றினார். 

sonia

மேற்கூறியவை அனைத்து நாம் கண்டும் கேட்டும் அறிந்தவை, அனால் இவை யாரும் அறியாத அவரின் பர்சனல் மேட்டர்ஸ்!

1. சோனியாவின் தந்தை ஸ்டெபனோ மைனோ அடால்ப் ஹிட்லரின் நாசி படையுடன் சேர்ந்து இடண்டாம் உலக போரில் சோவியத் மிலிட்டரிக்கு எதிராக சண்டையிட்டார்.

2. சோனியாவின் தந்தை ஆரம்பத்தில் ராஜிவ் உடனான காதலுக்கும் திருமணத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தார். 

rajiv

3. ராஜிவ் -சோனியா காதல் விவகாரம் குறித்து ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்த இந்திரா காந்தி,மனசு மாறி சோனியாவை தன்னை வந்து பார்க்குமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.மகிழ்ச்சியோடு அந்த சந்திப்புக்கு கிளம்பிய சோனியாவுக்கு பதட்டம் அதிகமானதால் இந்திரா காந்தியுடனான முதல் சந்திப்பு நடைபெற வில்லை.வேறு நாளில்தான் சந்திருக்கிறார். 

indira

4. சோனியா 1968 ஆம் ஆண்டு இந்தியா வந்தார், ராஜீவுடன் திருமணத்திற்கு முன்பு அவர் அமிதாப் பச்சனின் வெலிங்டன் கிரேஸிஸ்ண்ட் வீட்டில் தங்கியிருந்தார். 

5. சோனியாவின் மாமியார், மாமனாரின் திருமண நாளன்று சோனியாவும் ராஜீவும் திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் பிப்ரவரி 28 ஆம் நாள் 1968-ல் திருமண பந்தத்தில் இணைந்தனர். 

marriage

6. சோனியாவின் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஹிந்தி மொழி கற்றுகொடுக்க ஹிந்தி ஆசிரியரை நியமனம் செய்தனர். சோனியா பிரெஞ்சு மொழியில் சிறந்த புலமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

7. சோனியா இந்திரா காந்தியுடன் நல்ல உறவு கொண்டிருந்தார், சோனியா எப்போதும் இந்திராவின் அரசியல் வெற்றிகளுக்கு பாராட்டுகளைத் தெரிவிப்பார்.

indira

8. சோனியா எழுத்தாளராகவும்  திகழ்ந்தார், அவர் ராஜீவ் அண்ட் ராஜீவ்ஸ் வேர்ல்ட் (Rajiv and Rajiv’s World) என்ற 2 புத்தகங்கள்  எழுதியுள்ளார்.

book

சோனியா தற்போது கட்சியின் பணிகளை கையாண்டு வருகிறார், மேலும் கட்சியினர் அவரின் ஆளுமையால் திரும்பவும் கட்சி புது வலிமையோடும் தெம்போடும் அடுத்த தேர்தலை சந்திக்க முடியும்,வெற்றி பெற முடியும் என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் தொண்டர்களும் நம்புகிறார்கள். 

சோனியா காந்திக்கு toptamilnews.com சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…