வெளியானது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தது இந்த மாவட்டம் தான்?

 

வெளியானது பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்தது இந்த மாவட்டம் தான்?

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 

சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 

exam

கடந்த மார்ச் 1-ம் தேதி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து இத்தேர்வானது கடந்த மாதம் 19-ம் தேதி முடிவடைந்தது.  சுமார் 9 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 19 ஆம் தேதியான  இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் தேர்தலை முன்னிட்டு தேர்வு முடிவுகள் தாமதமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த வாரமே முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி  பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று  காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

result

இந்தத் தேர்விலும் வழக்கம் போல்  மாணவர்களை விட மாணவிகளே 5.07 சதவிகிதம் அதிகமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் அளவில்  அதிகம் தேர்ச்சியடைந்தவர்கள் என்ற ரீதியில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இங்கு 95.37 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல் ஈரோடு மாவட்டத்தில் 95.23 சதவிகிதம் பேரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 95.15 சதவிகிதம் பேரும், கோவை 95.01 சதவிகிதமும் நாமக்கல் 94.97 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

result

பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் 26 ஆம் தேதி வரை மாணவர்கள், பள்ளிகளில்  பெற்றுக் கொள்ளலாம். கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

students

மேலும்  தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளிலிருந்து தேர்வு எழுதிய கைதிகளில் 34 பேர்  இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் வாசிக்க: வாட்ஸப்பில் வெளியான பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்: அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்!