வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸான குயின் டீசர் 

 

வெளியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸான குயின் டீசர் 

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கும் இந்த தொடரில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், எம்.ஜி.ஆராக நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸை கிடாரி திரைப்பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்குகிறார்.

குயின்

எம்எக்ஸ் பிளேயர் நிறுவனம் தயாரிக்கும் இத்தொடரின் தலைப்புடனான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில், குயின் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்புடன் இப்படத்தின் 26 நொடிகள் கொண்ட டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 

குயின் படத்தின் டீசரில்,“மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி, சினிமாவின் சூப்பர் ஸ்டார் கதாநாயகி, இளம் முதலமைச்சர். ஒரு மகாராணியின் கதையின் பரபரப்பான பக்கங்கள் உங்களுக்காகவே… ட்ரெய்லர் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.