வெளியானது சூப்பர் ஸ்டாரின் தர்பார்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

 

வெளியானது சூப்பர் ஸ்டாரின் தர்பார்… ரசிகர்கள் கொண்டாட்டம்!

இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள்  உற்சாகத்துடன் உள்ளனர்.  

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியானது.

ttn

இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  இன்று உலகமெங்கும் வெளியானது. இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களிலும்,  இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள்  உற்சாகத்துடன் உள்ளனர்.  

ttn

தமிழக அரசு தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு  அனுமதி அளித்தையடுத்து நள்ளிரவு  முதலே தியேட்டர்களில்  ரசிகர்கள்  குவிய தொடங்கினர். அதிகாலை 4 மணியளவில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி அவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னையில் தர்பார் படத்தை காண லதா ரஜினிகாந்த் மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகியோர் ரோகிணி திரையரங்கத்திற்கு வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.