வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு: மத்திய உள்துறை அமைச்சகம்

 

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்களை அவரவர் மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு: மத்திய உள்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 31, 787 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1008 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 1,867 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கிலும் மே.3 ஆம் தேதி வரை ஊரடங்கை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுக்க சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

வெளிமாநில தொழிலாளர்கள்

மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். ஆனால் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால் வீடு இல்லாதவர்களும், புலம்பெயர்ந்த பணியாளர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு உணவு கிடைப்பதிலும், தங்கும் இடம் கிடைப்பதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. அத்துடன் போலீசார் சிலரும் இத்தகைய நபர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதாக புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. வீடற்றோர் மற்றும் புலம்பெயர்ந்த பணியாளர்கள்  தங்க இடம்,  உணவு, உடை, மருத்துவ கண்காணிப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட கிடைக்காமல் அவதியுற்றுவருகின்றனர்.

 மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள “வெளிமாநிலத் தொழிலாளர்களை அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உரிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பக்தர்கள் சுற்றுலா பயணிகள் மாணவர்களை அந்தந்த மாநில அரசுகள் அழைத்துக் கொள்ளலாம். இதனால் ஊரடங்கால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் நிம்மதி பெருமூச்சு அடைவர். இதன்மூலம் வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது