வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை..கொரோனாவால் ஒரு வாரத்திற்கு தடை விதித்தது இந்திய அரசு..

 

வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை..கொரோனாவால் ஒரு வாரத்திற்கு  தடை விதித்தது இந்திய அரசு..

மார்ச் 22-ம் தேதியிலிருந்து வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29-ம் தேதி வரை ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் சுமார் 173 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை 2.21 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை 9000 நெருங்கியுள்ளது. இந்தியாவில் இந்த வைரசால் 167 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் மேலும் ஒருவர் பலியானதையடுத்து, மொத்த உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது. ஏற்கனவே கர்நாடகா, டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சூழலில், தற்போது பஞ்சாபில் ஒருவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

representative image

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து , அதனை தடுக்க இந்திய அரசு சில முக்கிய முடிவுகளை வெளியிட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வெளிநாட்டு விமானங்கள் இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில், விமானங்களில் மாணவர்கள் மற்றும் நோயாளிகளை தவிர மற்றவர்களுக்கான பயண சலுகைகள் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

representative image

அதேபோல் 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் 10 வயதிற்கும் குறைவாக உள்ள குழந்தைகள் வீட்டிலேயே இருக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் தனியார்துறை ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்துமாறும் மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் வேலை நேரத்தை மாற்றி அமைத்துக்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.