வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

 

வெளிநாட்டில் பாஸ்போர்ட் தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கிய தேவை பாஸ்போர்ட். வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் பாஸ்போர்ட்டின் தேவை அத்யாவசியப்படுகிறது.

வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கிய தேவை பாஸ்போர்ட். வெளிநாடுகளுக்கு செல்லும் போதும், திரும்பும் போதும் பாஸ்போர்ட்டின் தேவை அத்யாவசியப்படுகிறது. ஆனால், எதிர்பாரா விதமாக உங்களது பாஸ்போர்ட் வெளிநாட்டில் தொலைந்து போனால் என்ன செய்வது கவலை வேண்டாம். நிதானமாக நீங்கள் செய்ய வேண்டியவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் உள்ளன.

passport

பெரும்பாலான வெளிநாட்டு ஹோட்டல்களில் நீங்கள் தங்குவதற்கு பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. உங்களது பாஸ்போர்ட் தொலைந்து போனால், உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்து அதற்கு உண்டான நகலையும், போலீசார் அளிக்கும் ஒப்புகை சீட்டையும் உங்கள் வசம் வைத்துக் கொள்ளுங்கள். புகார் அளிக்கும் போது, உங்களது பாஸ்போர்ட் எங்கு காணாமல் போனது என்ற விவரத்தையும் அதில் தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து, போலீசாரின் வழிகாட்டுதல்படி, அந்நாட்டில் உள்ள தூதரகத்தை நாம் அணுகலாம்.

பெரும்பாலான தூதரகங்கள் பொதுவான வேலைநேரத்தை கொண்டிருக்கும். தூதரக அதிகாரியிடம் புகார் அளிக்கும் போது, அந்நாட்டை விட்டு எப்போது நீங்கள் கிளம்புகிறீர்கள் என கூறுங்கள். பெரும்பாலும், 24 மணி நேரத்தில் உங்களுக்கு மாற்று பாஸ்போர்ட் வழங்கப்படும்.

passport1

மாற்று பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்கும் போது, உங்களது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, விமான டிக்கெட், காவல்நிலையத்தில் நீங்கள் அளித்த புகார் குறித்த தகவல், இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ கொடுக்க வேண்டும். உங்களிடம் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லையெனில், தூதரக அதிகாரியிடம் புகைப்படம் எடுக்க உதவுமாறு கோரலாம்.

மாற்று பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, உங்களது பழைய பாஸ்போர்ட்டுக்கான நகல் உங்களிடம் கேட்கப்பட மாட்டது. எனினும், உங்களது பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் வழங்கப்படத் தேதி, காலாவதியாகும் தேதி, வழங்கப்பட்ட இடம் கேட்கப்படும். எனவே, இந்த தகவல்களை உங்களது மெயில், செல்போன் உள்ளிட்டவற்றில் குறிப்பு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அவசர காலகட்டங்களில் இது உங்களுக்கு உதவும்.

உங்களது பாஸ்போர்ட் எதிர்பாரா விதமாக தொலைந்து விட்டால், அந்நாட்டில் நீங்கள் கூடுதலாக இருக்க நேரிடும். எனவே, நீங்கள் ரிடர்ன் டிக்கெட் புக் செய்திருந்தால், எந்த விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ளீர்களோ, அந்த விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிதடு விடுங்கள். உங்களது குழப்பங்களும் தீரும், ஒருவேளை நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருந்தால், உங்களது டிக்கெட்டை ரத்து செய்யாமலேயே வேறு தேதிக்கு அது மாற்றித் தரப்படும்.