வெறும் நான்கே ஓவர்கள் பேட்டிங்…ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அட்டகாச வெற்றி – யு19 உலகக் கோப்பை!

 

வெறும் நான்கே ஓவர்கள் பேட்டிங்…ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி அட்டகாச வெற்றி – யு19 உலகக் கோப்பை!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ப்ளாம்போன்டைன்: 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா தனது முதல் லீக் போட்டியில் இலங்கையை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்நிலையில், 2-வது லீக் போட்டியில் ஜப்பானை இன்று எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஜப்பான் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. அந்த அணி 22.5 ஓவர்களில் வெறும் 42 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவி பிஷ்னாய் 4 விக்கெட்டுகளையும், கார்த்திக் தியாகி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெறும் நான்கே ஓவர்களில் வெற்றிக் கனியை பறித்து தந்தனர். ஜெய்ஸ்வால் 29 ரன்களும், குஷாக்ரா 13 ரன்களும் அடித்தனர். இந்திய அணி தனது அடுத்த போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இப்போட்டி வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது.