வெறும் இரண்டே ரூபாயில் தானாக மூடும் கதவை உருவாக்கிய இளைஞர்!  அசந்துபோன ஆனந்த்  மஹேந்திரா

வெறும் இரண்டே ரூபாயில் தானாக மூடும் கதவை உருவாக்கிய இளைஞர்!  அசந்துபோன ஆனந்த்  மஹேந்திரா

வெறும் இரண்டே ரூபாய் செலவில் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள தானியங்கி கதவை பட்டித்தொட்டியெங்கும் பயன்படுத்தலாம். இந்த கதவு பற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

வெறும் இரண்டே ரூபாய் செலவில் இளைஞர் ஒருவர் உருவாக்கியுள்ள தானியங்கி கதவை பட்டித்தொட்டியெங்கும் பயன்படுத்தலாம். இந்த கதவு பற்றிய வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. 

வாட்ஸ் அப்பில் வைரலான இந்த வித்தியாசமான வீடியொ என்னை மிகவும் கவர்ந்துவிட்டது என மஹேந்திர நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டரில்,  வித்தியாசமான ஒரு இளைஞரின் விநோதமான இந்த கண்டுப்பிடிப்பு என்னை பிரமிக்கவைத்துள்ளது. இந்த வீடியோ சமீபத்தில் எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது. நமது அன்றாட வாழ்க்கை பிரச்னைக்கு ஒரு அரிய வகை கண்டுபிடிப்பு.

பொதுவாக ஒரு கதவை தானாக மூட ஹைட்ராலிக் இயந்திரத்திற்கு ரூ 1500 செலவு செய்யவேண்டும். ஆனால் இந்த நபர் வெறும் 2 ரூபாய் செலவில் ஒரு வித்தியாசமான தானாக மூடும் கதவு ஒன்றை செய்துள்ளார். அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கு என அதனை பிளே செய்து பார்த்தால்,  ஒருவர் தனது வீட்டு கதவின் மேல் தண்ணீர் பாட்டிலில் நீரை நிரப்பி அதனை கதவிற்கு பின்னால் நூலை மாட்டி தொங்கவிட்டுள்ளார். இந்த ஏற்பாடு கதவு திறந்தப் பின் தானாக கதவை திரும்பி மூட செய்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் கவனம் பெற்றுள்ளது.