‘வெறித்தனம்’மாக  அலையும் விஜய் ரசிகர்கள்… வெறியேத்த தயாராகும் தல ரசிகர்கள்… 

‘வெறித்தனம்’மாக  அலையும் விஜய் ரசிகர்கள்… வெறியேத்த தயாராகும் தல ரசிகர்கள்… 

தல-தளபதி ரசிகர்கள் காரணம் இருக்கோ இல்லையோ தங்கள் தலைவனைக் கொண்டாடறதும்,எதிர் தரப்பை கிண்டலடிக்கிறதும்… வார்ட்டன்’ன்னா நாங்க அடிக்கத்தான் செய்வோம் என்கிற வடிவேலு காமெடி மாதிரிதான்,சோஷியல் மீடியாவில் எந்தப் பக்கம் போனாலும் இந்தக் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கலாம்.

vijay vs ajith

இந்தா… அடுத்த அதிரடிக்கு ரெண்டு தரப்பும் ரெடியாகிருச்சு! யெஸ்,தளபதி விஜயின் பிறந்த நாள் அன்னைக்கு ரசிகர்களுக்கு வரிசையாக அடுத்தடுத்து போஸ்டர்களா இறக்கியது ‘பிகில்’ தரப்பு.அதுக்கான கொண்டாட்டமே இன்னும் முடியல… அதுக்குள்ள அடுத்ததை நேற்று இறங்கியிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘வெறித்தனம்’என்ற டைட்டில் சாங்கை உங்கள் இளைய தளபதி பாடுகிறார் என்று ஒரு போஸ்ட்டரைத் தட்டி விட்டதுதான் தாமதம்,அதை வெறித்தனமாக இப்போது வரை ட்ரெண்டடாக்கும் வேலையில் இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

bigil

தல ரசிகர்கள் சோர்ந்து போயிடக்கூடாதுன்னு ‘நேர்கொண்ட பார்வை’ டீம் யோசிச்சிருப்பாய்ங்க போல… ‘நாமளும் தட்டுவம்ல’ என்று படத்தின் ரெண்டாவது பாடலை இன்று மாலை தட்டிவிடுவதாக அறிவித்திருக்கிறார்கள். சோஷியல் மீடியாவை எகிறவைக்க தல ரசிகர்களும் வெறிகொண்டு காத்திருக்கிறார்கள்.

nerkonda paravai

இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு 10 % இட ஒதுக்கீடு பத்தியோ,முகிலன் விடுதலை பத்திய செய்திகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு,இந்த ரெண்டு பாடலில் யாரோடது டாப்பு என்ற சண்டைதான் ஓடும்… என்னத்த சொல்றது!?