வெயிலின் தாக்கம் தாளாமல், சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் படக்குழு 

 

வெயிலின் தாக்கம் தாளாமல், சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர் திடீர் மரணம்! சோகத்தில் படக்குழு 

சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர், கடும் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத்: சிரஞ்சீவி படத்தில் நடித்த ரஷ்ய நடிகர்,கடும் வெயிலின் தாக்கம் தாங்கமுடியாமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கில், சுதந்திர போராட்ட வீரரான உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற பெயரில் படமாகி வருகிறது.சுரேந்தர் ரெட்டி இயக்கிவரும் இப்படத்தில் சிரஞ்சீவி ரெட்டியாக நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா, விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், சுதீப், தமன்னா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். 

சிரஞ்சீவி

இவர்களுடன் இணைந்து பல வெளிநாட்டு நடிகர்களும் நடித்து வருகின்றனர். அதில், ஒருவர் தான் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் (38). இவர் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு வந்து தனது நண்பர்  அலெக்சாண்டர் போரேஸூடன் கோவாவில் வசித்து வந்தார். பின்னர் படங்களில் நடிக்கும் ஆசை இருந்ததால் ஏஜென்ட் மூலம் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வந்தார். 

இந்த நிலையில் ஐதராபாத், கடப்பா போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட அலெக்சாண்டர், சில நாட்களாக ஹைதராபாத்திலேயே தங்கியுள்ளார். அப்போது அங்கு கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், அங்குள்ள சைபர் சிட்டி அருகில் மயங்கி விழுந்துள்ளர். அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இருப்பினும்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் படக்குழு மிகுந்த சோகத்தில் உள்ளனர்.