வெப் சீரிஸைப் பார்த்து கோமாளி வேஷம் போட்டு கொள்ளையடித்த சுவாரஸ்ய திருடர்கள்!! 

 

வெப் சீரிஸைப் பார்த்து கோமாளி வேஷம் போட்டு கொள்ளையடித்த சுவாரஸ்ய திருடர்கள்!! 

லலிதா ஜுவல்லரி வாங்க… பிடிச்சிருந்தா வாங்கிக்கோங்க… அப்படினு விளம்பரம் பண்ணுனது தப்பா போச்சு.. திருடர்கள் பிளான்போட்டு வந்து, பிடித்த நகைகளை அள்ளிட்டு போய்ட்டாங்க. கடந்த 3 நாட்களாக லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற கொள்ளை சம்பவமே ஹாட் டாபிக்காக பேசப்பட்டுவருகிறது. 

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையை இன்று நேற்று அல்லது பல நாட்களாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது என தெரியவந்துள்ளது. அதாவது திருட வந்த கொள்ளையர்கள் நெட்ஃபிளிக்ஸ் தொடர் ஒன்றை பார்த்து கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. நெட்ஃபிளிக்ஸில் பிரபலமான க்ரைம் தொடர்களுள் ஒன்று மணி ஹீஸ்ட் (Money heist)’லா காசா டி பேபல்’ என்ற ஸ்பானிஷ் பெயரில் வெளியாகியுள்ள இந்த சீரிஸ், கொள்ளையடிப்பது தொடர்பான கதைக்கருவை கொண்டது.  அதாவது 9 கொள்ளைக்காரர்களின் லட்சியத்தையும், விதவிதமான வேடங்களில் கொள்ளையடிப்பதுமே இந்த சீரிஸின் கதை.. உலகிலேயே மிகப்பெரிய கொள்ளையர்களாக வரவேண்டும் என்பது தான்  மணி ஹீஸ்ட் கொள்ளையர்களின் லட்சியமாம்..  இந்த 9 கொள்ளையர்களும் சேர்ந்து ஸ்பெயினின் மத்திய வங்கியை கொள்ளையடிப்பர். இப்படியிருக்க மணி ஹீஸ்ட்டை பார்த்துதான் திருச்சியில் கொள்ளையடித்ததாக ஒப்புக்கொண்டுள்ளார் கொள்ளையர்களில் ஒருவரான மணி! 

money heist

திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளைச் சம்பவத்தில் பிடிபட்ட மணிகண்டனும் அவரது கூட்டாளி திருவாரூர் முருகனும் மணி ஹீஸ்ட் தொடருக்கு அடிமை என காவல்துறையினரிடம் மணிகண்டன் கூறியுள்ளார். சுவரில் ஓட்டைப்போடுவதிலும், கொள்ளை திட்டத்தை தீட்டுவதிலும் முருகன் எக்ஸ்போர்ட்… இதுவரை ஏராளமான வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் பல லட்சக்கணக்கான ரூபாயை முருகன் திருடியுள்ளார். 

 

 lalithaa

கொள்ளையடித்த சிடிவி காட்சிகள் வெளியானதில் திருடர்கள் அணிந்திருந்த சாதாரண செருப்பு, அவர்களின் கால் நிறம் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, இந்தத் திருட்டை வடமாநிலக் கொள்ளையர்கள் செய்யவில்லை என்றும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் செய்துள்ளனர் என்றும் காவல்துறையினர் உறுதி செய்தனர். அதன்பேரில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மணிகண்டன் பிடிப்பட்டார். அவருடைய கூட்டாளியையான முருகனையும் இதில் மாட்டிவிட்டார். முருகனை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளனர்.