‘வென்றால்  மன்னன்-தோற்றால் நாடோடி’ எம்.ஜி.ஆர் சொன்ன டயலாக் கமலுக்கும் பொருந்தும் ! இந்தியன்-2 அப்டேட் !?

 

‘வென்றால்  மன்னன்-தோற்றால் நாடோடி’ எம்.ஜி.ஆர் சொன்ன டயலாக் கமலுக்கும் பொருந்தும் ! இந்தியன்-2 அப்டேட் !?

இந்தியன் பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக இயக்குனர் ஷங்கர் தரப்பிலிருந்து செய்தி வந்ததிலிருந்தே,படத்தை பற்றிய அப்டேட்டைவிட பஞ்சாயத்து அப்டேட்கள்தான் அதிக அளவில் செய்தியாக வந்திருக்கிறது

இந்தியன் பார்ட் 2 படம் எடுக்கவிருப்பதாக இயக்குனர் ஷங்கர் தரப்பிலிருந்து செய்தி வந்ததிலிருந்தே,படத்தை பற்றிய அப்டேட்டைவிட பஞ்சாயத்து அப்டேட்கள்தான் அதிக அளவில் செய்தியாக வந்திருக்கிறது!

இந்தப் படம் தொடங்கி நாலாவது நாளே கமலுக்கு போடப்பட்ட மேக்-அப் செட்டாகவில்லை.அதனால் தற்காலிகமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சரியான பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று ஷங்கர் தரப்பு சொல்வதாக செய்திகள் வந்தது!

shankar

அப்புறம்,செட் ஒர்க் இன்னும் முடியவில்லை.அதனால் படப்பிடிப்புக்கு இன்னும் கொஞ்சம் தாமதம் ஆகும் என்று சொல்லப்பட்டது.கடந்த வாரம் பட்ஜெட் குறித்து இயக்குனர் தரப்பிலிருந்து முடிவு சொல்லாததால் படம் டிராப் என்று சிலர் பத்த வச்ச நெருப்பு பத்தி எரிந்தது.எப்போதும் இது போன்ற செய்திகளுக்கு ரியாக்ட் பண்ணாத லைக்கா தரப்பு,முதல் முறையாக அந்த தகவலில் உண்மையில்லை என்று மறுப்பு செய்தி வெளியிட்டது!

mgr

லைக்கா தரப்பில் சொல்லப்பட்ட தகவல் உண்மைதான்.EVP யில் செட் ஒர்க் நடந்து முடிந்து விட்டது.வருகிற மார்ச் மாதம் 20-ஆம் தேதிக்கு மேல் நார்த் அமெரிக்காவுக்கு கிளம்பிப்போய் ‘பொலிவியா’-வில் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்கு லைக்கா தரப்பிலிருந்து எல்லா ஏற்பாடுகளும் நடந்துவிட்ட நிலையில் அந்தப் படப்பிடிப்பு நடக்குமா நடக்காதா என்ற குழப்பதில் இருக்கிறார்கள் ஷங்கர் அண்ட் டீம்!

 மறுபடியுமா!? யெஸ்! இந்த முறை சிக்கல் கமல் தரப்பிலிருந்து.நாடாளுமன்ற தேர்தல் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார் கமல்.தினமும் வெவ்வேறு ஊர்களுக்கு பயணம்,கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் என்று நிற்க நேரமில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

kamalhaasan

40 தொகுதியிலும் தனியாக நிற்போம் என்று சொல்லிவிட்டு ஷூட்டிங் போனால்,அரசியல் களத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளுக்கு என்ன மாதிரி மூவ்களை வைக்கணும் என்பதில் சிக்கல் வந்துவிடும் என்று நினைக்கிறார் கமல்.சரி,எலெக்சன் முடியும் வரை காத்திருந்து,அப்புறம் ஷூட்டிங் போகலாம் என்பது போல் கமல்  தரப்பு நினைக்கிறது.ஆனது ஆச்சு,மூணு மாசம் கழிச்சு போகலாம் என்கிறார்கள் இரண்டு தரப்புக்கும் நடுவில் பேச்சுவார்த்தை நடத்தும் ஆட்கள்.அங்கேதான் சிக்கலே!

நடக்கவிருக்கிற எலெக்சனில் கமல் கணிசமான சீட்டுக்களை கைப்பற்றினால், இன்னும் தீவிர அரசியலுக்கு போயிருவார்.அப்புறம் பிட்டு பிட்டாக அவர் கொடுக்கும் கால்ஷீட்டை வைத்து படத்தை முழுவதுமாக முடிக்க குறைந்த பட்சம் நான்கு ஆண்டுகள் கூட ஆகலாம்.அது எப்படி சரிவரும் என்று நினைக்கிறது இயக்குனர் தரப்பு.

indian2

லைக்கா தரப்பில் வேறுமாதிரியாக கணக்குப் போடுகிறார்கள்.எப்படி தெரியுமா? ஒரு வேளை நடக்கவிருக்கிற தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை எட்டவில்லை என்றால் அது இந்தியன்-2வை பாதிக்கும் என்று நினைக்கிறார்கள். ஏற்கனவே வெளிவந்த இந்தியன் படத்தைவிட இதில் ஊழலுக்கு எதிராக வலுவான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

kaala

சூப்பர் ஸ்டார் ரஜினி தூத்துக்குடி கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்துவிட்டு வரும்போது அவர் ரியாக்ட் பண்ணின விதம் ‘காலா’வின் வசூலை சுத்தமாக காலி செய்துவிட்டது.அது மாதிரி இந்தியன்-2வுக்கும் நடந்தால் என்ன செய்வதென்று யோசிக்கிறது லைக்கா.

Ball இப்போ,ஆழ்வார்பேட்டை ஆண்டவர் கையில்! இப்போ,டயர்டாகி இருந்தாலும் பரவாயில்லை; மீண்டும் ஒரு முறை டைட்டிலை படித்துவிடுங்கள் ப்ளீஸ்!