‘வெண்ணிலா கபடி குழு 2’ படம் எப்படி இருக்கும்? இயக்குநர் செல்வசேகரன் ருசிகர தகவல் 

‘வெண்ணிலா கபடி குழு 2’ படம் எப்படி இருக்கும்? இயக்குநர் செல்வசேகரன் ருசிகர தகவல் 

கபடி போட்டியை மையப்படுத்திக் கடந்த 200ம் ஆண்டு வெளியான திரைப்படம் வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான இதில் விஷ்ணு விஷால், புரோட்டா சூரி ஆகியோர் நடித்து தமிழ் சினிமால் ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளனர். 

அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் செல்வசேகரன் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘வெண்ணிலா கபடி குழு 2’ என்ற பெயரில் இயக்கியுள்ளார். அப்படத்தின் பணிகள் அனைத்தும் முடிவுயடைந்து ரிலீஸ்க்கு தயராகவுள்ளது. 

வெண்ணிலா கபடி குழு

இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அதில் விக்ராந்த், அப்புகுட்டி, இயக்குனர் செல்வசேகரன், பிக்சர் பாக்ஸ் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அதில் பேசிய  இயக்குனர் செல்வசேகரன், ‘1987ம் ஆண்டில் கிரமங்களில் உள்ள மக்கள் அனைவரும் ஒன்று கூடி கபடி போட்டியை விமர்சையாக திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வை அப்படியே நம் கண்முண்னே கொண்டு வருவது போல் இந்த படம் அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார். 

இதில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க, கதாநாயகியாக அர்த்தனா பினு நடித்துள்ளனர். மேலும் பசுபதி, புரோட்டா சூரி, கிஷோர், அப்புகுட்டி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.