வெண்ணிலா ஐஸ்க்ரீம் தெரியும்,ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் தெரியும்! அதென்ன சில்லி ஐஸ்க்கிரீம்!? ஜஸ்ட் ட்ரை

 

வெண்ணிலா ஐஸ்க்ரீம் தெரியும்,ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம் தெரியும்! அதென்ன சில்லி ஐஸ்க்கிரீம்!? ஜஸ்ட் ட்ரை

சாதாரணமாகவே எல்லா வயதினருக்கும் பிடித்த உணவுகளில் ஐஸ்க்கிரீமுக்கு முக்கிய இடம் உண்டு.

சாதாரணமாகவே எல்லா வயதினருக்கும் பிடித்த உணவுகளில் ஐஸ்க்கிரீமுக்கு முக்கிய இடம் உண்டு. டயாபடீக் பிராப்ளம் இருக்கிற ஆளுங்க கூட,அடுத்தாளுக்கு தெரியாம ரகசியமா ஒரு ஐஸ்க்ரீமை சாப்பிடுவதை நீங்கள் சாதாரணமாக பார்க்கலாம்!

ice cream

இப்போது கோடை வெய்யில் கொளுத்தும்.நேரத்தில் விதவிதமான ஐஸ்க்கிரீம்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.ஆனால் எல்லாம் நாம் ஏற்கனவே ருசித்துப் பார்த்த ஃபிளேவர்கள்தான்.

ice cream

இப்படி சலித்துப்போன யாரோ ஒரு புண்ணியவானுக்கு வந்த ஐடியாதான் இது
இப்போதைக்கு இது கடைகளில் கிடைக்க வழியில்லை.நீங்களேதான் தயாரித்து கொள்ள வேண்டும். பயப்படாதீர்கள் சிம்பிள் ரெசிப்பிதான்.

சில்லி ஐஸ்க்கிரீம் செய்முறை:

தேவையான பொருட்கள்

வெனிலா ஐஸ்க்கிரீம் – 2 கப்
பச்சை மிளகாய்          – 2
கடலை மிட்டாய்          – 3

பச்சை மிளகாயின் விதைகளை நீக்கிவிட்டு எவ்வளவு பொடியாக வெட்ட முடியுமோ அவளவு பொடியாக வெட்டிக் கொள்ளுங்கள். கடலை மிட்டாய்களையும் சிறு சிறு துணுக்குகள் ஆக்கிக் வைத்து கொள்ளுங்கள்.

இப்போது, இரண்டையும் வெனிலா ஐஸ்கிரீமுடன் சேர்த்து கலக்குங்கள்.
இந்தக் கலவையை ஒரு அரைமணி நேரம் ஃபிரிட்ஜில் வைத்துவிட்டு எடுத்து சுவைத்துப் பாருங்கள்,முரண்பட்ட கட்சிகள் அமைத்த வெற்றிக் கூட்டணி போல நீங்கள் வாயில் போடும் ஒவ்வொரு ஸ்பூனிலும் ஒரு எதிர்பாராத திருப்பத்துடன் இருக்கும்.முயன்று பாருங்கள்.

இதையும் படிங்க: ருசியான மைசூர் போண்டா செய்வது எப்படி?