வெங்காய விலை உயர்வு: அ.தி.மு.க அமைச்சர்கள் ஆலோசனை…

 

வெங்காய விலை உயர்வு: அ.தி.மு.க அமைச்சர்கள் ஆலோசனை…

கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிபத்திற்கு குறைந்த விலையில் கொடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, ஆந்திர, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட அதிக வெங்காய விளைச்சல் அளிக்கும் பகுதிகளில் அதிக மழை பெய்து வருவதால் விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது. அதனால், பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பெரிய வெங்காயம் சுமார் 60 முதல் 80 ரூபாய்க்கு விற்கப் படுகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே வெளிநாடுகளில் வெங்காயம் கொள்முதலுக்கு டெண்டர் கேட்டிருந்தது.  

Onion

இந்நிலையில், தமிழக அரசும் வெங்காயத்தின் விலையை கட்டு படுத்ததீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து தலைமை செயலகத்தில் இன்று, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் மற்ற தலைவர்கள் விலை உயர்வை பற்றி ஆலோசனை நடத்தினர். 

மேலும், அக்கூட்டத்தில் தனியாரிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து நுகர்வோர் வாணிபத்திற்கு குறைந்த விலையில் கொடுப்பது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இக்கூட்டம் பற்றிய முழு விவரங்களும் முடிவுகளும் பின்னர் வெளியாகும் என எதிர் பார்க்கப் படுகிறது.