வெங்காயத்திற்காக வெளிநாட்டில் கையேந்தும் மத்திய அரசு! வருகிறது ஒரு லட்சம் டன் வெங்காயம்…

வெங்காயத்திற்காக வெளிநாட்டில் கையேந்தும் மத்திய அரசு! வருகிறது ஒரு லட்சம் டன் வெங்காயம்…

வெங்காய விலை உயர்ந்து வருவதற்கு தீர்வாக வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

வெங்காய விலை உயர்ந்து வருவதற்கு தீர்வாக வெளிநாட்டிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார். 

வெங்காயம் அதிகம் விளையும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ததால் வெங்காயத்தின் வரத்து குறைந்து அதன்விலை அதிகரித்துள்ளது. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதேபோல் சென்னையில் 60 முதல் 65 ரூபாய் வரை  விற்பனை செய்யப்பட்டுவருகிறது. 

ram vilas paswan

இந்நிலையில் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் அவரது ட்விட்டர் பக்கத்தில், “ வெங்காய விலையேற்றத்தின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து ஒரு லட்சம் டன் வெங்காயத்தை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அப்படி வெளிநாடுகளிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் வரும் நவம்பர் 15 ஆம் தேதி முதல் டிசம்பர் 15 ஆம் தேதி வரை உள்நாட்டு சந்தைகளில் விற்பனைக்கு வரும்” என பதிவிட்டுள்ளார்.