வீட்டு உரிமையாளரை வெடிவைத்து தாக்க முயன்ற கரப்பான் பூச்சிகள் !

 

வீட்டு உரிமையாளரை வெடிவைத்து தாக்க முயன்ற கரப்பான் பூச்சிகள் !

பிரேசிலில் கரப்பான் பூச்சியை கொல்ல நிலத்தின் மீது பெட்ரோல் ஊற்றியபோது திடீரென அந்தப் பகுதி வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பிரேசிலில் கரப்பான் பூச்சியை கொல்ல நிலத்தின் மீது பெட்ரோல் ஊற்றியபோது திடீரென அந்தப் பகுதி வெடித்து சிதறிய வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

பிரேசில் நாட்டில் எனியாஸ் பகுதியில் சேர்ந்த சீஸர் செமிட்ஸ் என்பவர் வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளது. அவற்றை ஒழிக்க பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்தாமல் கொலை வெறி எண்ணத்துடன் விபரீத முயற்சி மேற்கொண்டார் சீஸர் செமிட்ஸ். இதற்காக கரப்பான் பூச்சி துளையில் பெட்ரோலையும், பூச்சி மருந்தையும் கலந்து ஊற்றியுள்ளார். ஆனாலும் அதற்கு கரப்பான் பூச்சிகள் மசியவில்லை. துளைக்கு மேலே வந்து எட்டி எட்டி பார்த்து விட்டு பின்னர் குழிக்குள்ளே சென்றுவிட்டன.

brazil cockroach

இதனால் ஆத்திரம் அடைந்த அவர் வத்திப் பெட்டி எடுத்து வந்த பற்றவைத்து அந்த கரப்பான் பூச்சிகள் வாழும் குழிக்குள் போட்டுள்ளார். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அந்த குழி வெடித்து சிதறியது. அதில் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார் சீஸர். கரப்பான் பூச்சிகள் அதிகமான கழிவுகளை சேர்த்து வைத்திருந்ததால், அதில் மீத்தேன் வாயு உற்பத்தியாகி வெடித்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுக்கிறது. ஆனாலும் இவ்வளவு கோர சம்பவம் நடந்த பிறகும் கரப்பான் பூச்சிகள் கொல்லப்பட்டதாக என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.

கரப்பான், பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத் தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

கரப்பான் பூச்சி தலையை வெட்டிவிட்டால் கூட இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது.