வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை சுவற்றில் அடித்துக்கொன்ற பாகிஸ்தான் ஆசிரியர்!

 

வீட்டுப்பாடம் எழுதாத மாணவனை சுவற்றில் அடித்துக்கொன்ற பாகிஸ்தான் ஆசிரியர்!

லாகூர் அருகே குல்ஷான்–இ–ரவி பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஹஃபீஸ் ஹுனைன் பிலால் எனும் 16 வயது மாணவனை, கம்ரான் எனும் ஆசிரியர் வயிற்றில் எட்டி உதைத்தும், தலையை சுவற்றில் முட்டியும் தண்டனை அளித்திருக்கிறார். மயக்கமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், பையன் ஏற்கெனவே இறந்துவிட்டான் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர்.

வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிக்கு வந்து வாத்தியாரிடம் அடிபட்ட அனுபவத்தைச் சொல்லச் சொன்னால், கேட்பவருக்கு காதில் ரத்தம் வருமளவுக்கு கதைகள் கிடைக்கும். எங்க வாத்தியார் ஒருத்தருக்கு பசங்களை அடிக்க காரணமே தேவைப்படாது. காரணம் தேவைப்படாமலேயே பொளந்து கட்டுவார், வீட்டுப்பாடம் செய்யவில்லை, மார்க் வாங்கவில்லை என்றால் போதும், தீபாவளி கொண்டாடிவிடுவார். இருப்பதிலேயே கடினமான மர ஸ்கேலை ஸ்டாக் வாங்கி வச்சுக்குவார் ஜூன் மாசமே. அடிவாங்கவேண்டிய பசங்களை வரிசையில் நிற்கவைத்து உள்ளங்கையை திருப்பி பின்புறத்தில் இருக்கும் விரல்களின் எலும்பில் அடிபடும்படி கவனமாக அடிப்பார். அடிவாங்குகிறவனைவிட அடுத்து நிற்பவனுக்குத்தான் அடிவயிறு கலங்கும். அடிவாங்கியபிறகு சோறு அள்ளித் திங்கமுடியாது அந்தக்கையால் ரெண்டு நாளைக்கு. ’வாத்தியார் அடிக்கிறார்’ என்று வீட்டில் சொன்னால் ’பேசாம போறியா இல்ல இன்னொரு கையில நான் அடிக்கவா’ என்பார்கள்.

American Lycetuff School, Lahore

அஹிம்சை தேசமான காந்திய பூமியிலேயே இவ்வளவு டார்ச்சர் என்றால், பாகிஸ்தானில் எவ்வளவு கொடுமை நடக்கும்? நடந்துவிட்டது. வீட்டுப்பாடம் செய்யவில்லை என லாகூர் அருகே குல்ஷான்–இ–ரவி பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் ஹஃபீஸ் ஹுனைன் பிலால் எனும் 16 வயது மாணவனை, கம்ரான் எனும் ஆசிரியர் வயிற்றில் எட்டி உதைத்தும், தலையை சுவற்றில் முட்டியும் தண்டனை அளித்திருக்கிறார். மயக்கமடைந்த மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால், பையன் ஏற்கெனவே இறந்துவிட்டான் என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். பாகிஸ்தானில் நண்பன் இறந்துவிட்டான் என செய்தி தெரிந்த மாணவர்கள் கொதித்தெழுந்துவிட்டார்கள். பள்ளிக்கு தீவைத்துவிட்டார்கள். இரண்டு வகுப்பறைகள் முற்றிலும் எரிந்துவிட்டன. ’வாத்தியார் அடிச்சிட்டார் மச்சி’, என்றால் என் நண்பர்களின் அதிகபட்ச பழிவாங்கல் ஐடியா வாத்தியார் சைக்கிளில்/வண்டியில் டயரை பஞ்சராக்குவதுதான்.