வீட்டுக்குள் பால் காய்ச்சுவதுபோல சாராயம் காய்ச்சிய கும்பல்… ‘ஒயின் ஷாப் மூடியாச்சி, கள்ளச்சாராயம் வந்தாச்சு’

வீட்டுக்குள் பால் காய்ச்சுவதுபோல சாராயம் காய்ச்சிய கும்பல்… ‘ஒயின் ஷாப் மூடியாச்சி, கள்ளச்சாராயம் வந்தாச்சு’

கொரோனா வைரஸ் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதால் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கள்ள சாராயம் காய்ச்சி, பணம் சம்பாதிக்கும் கும்பல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியதால் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கள்ள சாராயம் காய்ச்சி, பணம் சம்பாதிக்கும் கும்பல் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. 
கர்நாடக மாநிலத்தில் இந்த ஊரடங்கின்போது போது கள்ளசாராயத்தினை வீட்டுக்குள்ளே தயாரித்த ஒரு கும்பலை போலீசார் அதிரடி சோதனை செய்து பிடித்து, பல்லாயிரம் லிட்டர் மதுவை கைப்பற்றினர்.

kallacharayam-02

இந்த கள்ளச்சாராயம் காய்ச்சுவதை பற்றிய தகவல்கள் கலால் துறைக்கு வந்ததும், மாநிலம் முழுவதும் சோதனைகள் நடத்த அதிகாரிகள் முடிவு செய்து கள்ளத்தனமாக தயாரிக்கப்பட்ட மதுபானங்களை பறிமுதல் செய்தனர். இந்த ஆண்டு மார்ச் 27 முதல் ஏப்ரல் 5 வரை மொத்தம் 5,021 லிட்டர் இந்திய மதுபானம் (ஐஎம்டி) 1,465 லிட்டர் பீர் மற்றும் 632 லிட்டர் ஒயின் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
இந்த அதிரடி சோதனைகளுக்குப் பிறகு அதிகாரிகள் 292 வழக்குகளை பதிவு செய்து 123 பேரை கைது செய்தனர். இதில் பெங்களூருவில் மட்டும்  3,687 லிட்டர் இந்திய மதுபானங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.