வீட்டில் இருக்கும் நேரத்தில், ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டும் சல்மான் கான்

 

வீட்டில் இருக்கும் நேரத்தில்,  ஓவியம் வரைவதில் ஆர்வம் காட்டும் சல்மான் கான்

salman khan

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவைத் தொடர்ந்து இந்தியா உட்பட 160 நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை வைரஸால் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சலின் தீவிரத்தால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் 169 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

கோவிட் – 19 வைரஸை உலகளாவிய நோய்த் தொற்றுஎன உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

சினிமா படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதால், பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டில் இருக்கும் நேரத்தை ஓவியம் தீட்டுவதில் செலவு செய்து வருகிறார். தான் ஓவியம் தீட்டும் வீடியோ ஒன்றையும், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில்நமது ஆடை அணியும் முறைதான் கலாச்சாரம் செய்ததிலேயே மிகச்சிறந்த விஷயம்என்று கூறும் சல்மான் ஒரு ஆணின் முகமும் ஒரு பெண்ணின் முகமும் கொண்ட ஒரு ஓவியத்தைத் தீட்டுகிறார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Salman Khan (@beingsalmankhan) on

 

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.