வீட்டில் இயங்கிவந்த தீப்பெட்டி தொழிற்சாலை வெடித்து விபத்து; 30 பேர் தீயில் கருகி பலி 

வீட்டில் இயங்கிவந்த தீப்பெட்டி தொழிற்சாலை வெடித்து விபத்து; 30 பேர் தீயில் கருகி பலி 

இந்தோனேஷியாவில், வீட்டில் இயங்கிய தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்  தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேஷியாவில், வீட்டில் இயங்கிய தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்  தீப்பிடித்து எரிந்ததில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர்.

வடக்கு சுமத்ராவில் உள்ள சம்பிரெஜோ (Sambirejo) கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டில் தீப்பெட்டி தொழிற்சாலை குடோன்  இயங்கி வந்தது. இந்நிலையில் குடோன் நேற்று திடீரென தீவிபத்துக்குள்ளானது. இதில் 3 குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், உடனடியாக விரைந்து பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணப்பட்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கெட்ட விசாரணையில் எரிவாயு சிலிண்டர் வெடித்தே இந்த தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. குடோனில் இருந்த எல்லா உடல்களும்  தீயில் கருகிப் போய் விட்டன. எவரும் தப்பிப் பிழைக்கவில்லை என தீவிபத்தை அருகிலிருந்து பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர் . தீ விபத்துக்கு என்ன காரணம் என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.