வீட்டிலேயே  “பெப்பர் ஸ்ப்ரே” செய்வது எப்படி? 

 

வீட்டிலேயே  “பெப்பர் ஸ்ப்ரே” செய்வது எப்படி? 

வீட்டில் தனியாக இருக்கும் பெண் ஆக இருந்தாலும் சரி அல்லது வெளியே செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி “பெப்பர் ஸ்ப்ரே” கையில் வைத்து இருப்பது நல்லது

வீட்டில் தனியாக இருக்கும் பெண் ஆக இருந்தாலும் சரி அல்லது வெளியே செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி “பெப்பர் ஸ்ப்ரே” கையில் வைத்து இருப்பது நல்லது. மகளிர் சுய உதவிக்குழுக்களினால் தயார் செய்யப்படும் இந்த “பெப்பர் ஸ்ப்ரே” தற்போது மார்க்கெட்டில் அனைத்துப் பெரிய கடைகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படி கடைகளில் வாங்க முடியாவிட்டால் அதை வீட்டில் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க 

தயாரிப்பதற்கு முன்பு: 

“பெப்பர் ஸ்ப்ரே” செய்வதற்கு முன்பு கைகளுக்கு கிளவுஸ் மற்றும் கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொள்வது நல்லது. ஏனெனில் சிலருக்கு மிளகு மற்றும் மிளகாய்த்தூள் நெடி மூக்கிலேறி தொடர்ச்சியாக தும்மல் வரவாய்ப்பு உள்ளதால் இதை பயன்படுத்தி கொள்ளவும் 

தேவையான பொருட்கள்: 

* வினிகர்- 2 ஸ்பூன் 
* காய்ந்த மிளகாய் தூள் – 2 ஸ்பூன் 
* மிளகுத்தூள்- 2 ஸ்பூன் 
* மிளகாய்த்தூள்- 2 ஸ்பூன் 
* எண்ணெய்- 2 ஸ்பூன் 
* கண்ணாடி பாத்திரம் -1 
* ஸ்ப்ரே பாட்டில் – 1 

எப்படி செய்வது? 

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் வினிகர் தவிர்த்து மேற்குறிப்பிட்ட அனைத்து  பொருட்களையும் கொட்டி நன்கு கலக்கி கொள்ளவேண்டும். கலக்கும் பொது கைக்குட்டை வைத்து மூக்கில் நெடியேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கடைசியாக அந்த கலவையில் வினிகர் ஊற்றி ஒரு சிறு துளி கூட சிந்தாமல் அப்படியே அந்தப் பாட்டிலில் உற்ற வேண்டும். ஸ்ப்ரே பாட்டில் இருந்து வெளியேறாத அளவு மூடியைத் தேர்ந்து எடுக்க வேண்டும். இப்போது நீங்கள் வீட்டிலேயே தயார் செய்த பெப்பர் ஸ்ப்ரே ரெடி