வீட்டிலிருந்தே பணிபுரிய ஊழியர்களை ஊக்குவிக்க கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் புதிய ஏற்பாடு

 

வீட்டிலிருந்தே பணிபுரிய ஊழியர்களை ஊக்குவிக்க கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் புதிய ஏற்பாடு

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரிய ஊழியர்களை ஊக்குவிக்க கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் புதிய ஏற்பாட்டை செய்துள்ளன.

டெல்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீட்டிலிருந்தே பணிபுரிய ஊழியர்களை ஊக்குவிக்க கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் புதிய ஏற்பாட்டை செய்துள்ளன.

கொரோனா வைரஸ் காட்டுத் தீ போல உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பேஸ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்துக்கு நேரடியாக வர வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விட்டன. வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு ஊழியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் இதே முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளன.

மேலும் ஊழியர்கள் அலுவலக மேலதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள, ஆலோசிக்க, பேசுவதற்கு என்று தங்கள் தகவல் தொடர்பு சேவைகளை ஊழியர்களுக்கு எளிமையாக்கி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனம் தங்களது மைக்ரோசாப்ட் டீம் என்ற இலவச சேவையின் சிறப்பம்சங்களை அதிகரித்துள்ளன. அதேபோல கூகுள் நிறுவனம் ஹேங்அவுட்ஸ் மற்றும் ஜி சூட் போன்ற சேவைகளின் சிறப்பம்சங்களை அதிகரித்துள்ளன. இதனால் அத்தகைய சேவைகளின் வாய்ஸ்கால், வீடியோகால், ஸ்டோரேஜ் ஆகியவை அதிகரித்து ஊழியர்களுக்கு சாதகமாக மாற்றப்பட்டுள்ளன.