வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்ய திட்டம்! 

வீட்டிற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்ய திட்டம்! 

ஆதரவில்லாமல் இருக்கும் முதியோரின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. 

ஆதரவில்லாமல் இருக்கும் முதியோரின் வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய மத்திய பிரதேச அரசு திட்டமிட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய பிரதேச மாநில உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ள அறிக்கையில், “ஆதரவில்லாமலும், உதவி செய்ய ஆள் இல்லாமலும் தனியாக வசிக்கும் 75 வயதுடையவர்களின் வீட்டிற்கே ரேஷன் மளிகை பொருட்கள் கொண்டுவந்து கொடுக்கப்படும். உறவினர்கள் இருந்தால், அவர்களில் ஒருவரை ரேஷன் பொருட்களை வாங்க முதியோர் நியமித்துக்கொள்ளலாம். 

ரேஷன் கார்டு

இதேபோல் போலி ரேஷன் கார்டுகளை கண்டறிய ரேஷன் மித்ரா என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை  இணைக்கும் திட்டம் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 83 லட்சம் பேர் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.