வீடு லீசுக்கு தருவதாகக் கூறி பத்திரிகையாளரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி! நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை 

வீடு லீசுக்கு தருவதாகக் கூறி பத்திரிகையாளரிடம் ரூ.7.5 லட்சம் மோசடி! நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை 

வீட்டை ரூ.7.5 லட்சத்துக்கு லீசுக்கு தருவதாகக் கூறி ஓய்வு பெற்ற பத்திரிகையாளரிடம் பணத்தைப் பெற்ற நபர் வீட்டையும் ஒப்படைக்காமல், பணத்தையும் திரும்ப அளிக்காமல் ஏமாற்றி செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலை முரசு பத்திரிகையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரவீந்திரன் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
“வயதான காலத்தில் வாடகை வீடு மாறுவது சிரமமாக உள்ளது என்பதால், லீஸ் ஒப்பந்த முறையில் வீடு தேடினேன். முகவர் ஒருவர் மூலமாக சென்னை பள்ளிக்கரணை சுண்ணாம்பு குளத்தூரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்று இருப்பதைக் கண்டறிந்தேன். அதன் உரிமையாளரிடம் ரூ.7.5 லட்சம் கொடுத்து லீசுக்கு அந்த வீட்டைப் பெற்றேன். ஆனால், வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை என்னிடம் ஒப்படைக்காமல், ரூ.7.5 லட்சத்தைத் திரும்பத் தராமல் ஆறு மாதமாக அலைக்கழித்து வருகிறார்.
இது குறித்து பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தேன். ஆனாலும் நடவடிக்கை இல்லை. தற்போது என்னுடைய உடல்நிலை மோசமாக உள்ளது. இதய நோயாளியான எனக்கு தற்போது சிறுநீரகங்களிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையில் உள்ளேன். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாமல் அவதியுறுகிறேன். எங்கள் வீட்டின் வாடகையையே என் மகள்தான் தருகிறார். எனவே, எங்கள் சேமிப்பு பணத்தை மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.