வீடு கட்ட தோண்டிய குழியில் விழுந்த சிறுமி….போராடி மீட்ட இளைஞர்கள்; வைரல் வீடியோ!

 

வீடு கட்ட தோண்டிய குழியில் விழுந்த  சிறுமி….போராடி மீட்ட இளைஞர்கள்; வைரல் வீடியோ!

வீடு கட்டும் திட்ட பணிக்காக 10  அடி ஆழத்தில் போர்வெல் இயந்திரத்தைக் கொண்டு அஸ்திவார குழி அமைத்துள்ளார்

விழுப்புரம் மாவட்டம் சின்னபாபுசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவரது சகோதரர் பாஸ்கரன் என்பவர் பொங்கல் பண்டிகைக்காக சரோஜா வீட்டுக்கு கும்பத்துடன் வந்துள்ளார். இதனிடையே  சரோஜா தமிழக அரசின் வீடு கட்டும் திட்ட பணிக்காக 10  அடி ஆழத்தில் போர்வெல் இயந்திரத்தைக் கொண்டு அஸ்திவார குழி அமைத்துள்ளார். 

ttn

இந்நிலையில் சரோஜா ஏற்படுத்திய அந்த குழியில் பாஸ்கரனின்  4 வயது மகள் கோபினி  தவறி விழுந்துள்ளார். இதையடுத்து சிறுமி கோபினி அலறி கூச்சலிட  பாஸ்கரன் உள்ளிட்ட குடும்பத்தினர் சிறுமி குழிக்குள் விழுந்ததைப் பார்த்து கத்தி கூச்சலிட்டுள்ளனர். இதை தொடர்ந்து அங்கு வந்த அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்க போராடியும் மீட்கமுடியவில்லை. காரணம் சிறுமியின் கைகள் குழிக்குள் சிக்கியிருந்தது. இதை தொடர்ந்து  தீயணைப்பு படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 
 

 

இதனிடையே பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழிக்கு பக்கவாட்டில் மற்றொரு குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சியில்  ஈடுபட்ட அப்பகுதி இளைஞர்கள் சுமார் 1 மணிநேரம் போராடி குழந்தையை மீட்டனர்.  அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது இணையத்தில் வெளியாகி  இளைஞர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.