வீடு ஒதுக்காத அரசு அதிகாரிக்கு தரும அடி ! ஏழைப்பெண்கள் ஆவேசம் !

 

வீடு ஒதுக்காத அரசு அதிகாரிக்கு தரும அடி ! ஏழைப்பெண்கள் ஆவேசம் !

மத்திய பிரதேசத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறையாக வீடு ஒதுக்காத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

மத்திய பிரதேசத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறையாக வீடு ஒதுக்காத அரசு அதிகாரியை செருப்பால் அடிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மத்திய அரசின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டமானபிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாதிட்டம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

house

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள வீடுகள் மூப்பு அடிப்படையில் உள்ள பயனாளிகளுக்கு வழங்கமால் மற்றவர்களுக்கு வழங்கப்பட்டள்ளதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுகுறித்து, இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கிடைக்காத பெண்கள், அரசு அலுவலர்களிடம் கேட்டபோது முறையான பதில் கூறவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பு இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது சில பெண்கள், அரசு அதிகாரிகளை வசைபாட, ஆத்திரத்தில் இருந்த பெண் ஒருவர் ஆவேசத்துடன் அரசு அதிகாரியை காலணியால் தாக்கினார். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கிருந்த மற்ற பெண்கள் அரசு அதிகாரிகளை வெளுத்து வாங்கினர். மத்திய பிரதேச மாநிலத்தில் இத்திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக தற்போது வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகளுக்கு பெண்கள் விண்ணப்பம் எழுதும்போது மிகவும் மரியாதையுடன், மதிப்பிற்குரிய ஐயா என எழுதுகிறார்கள். ஆனால் தாங்கள் ஏமாற்றப்படுவது தெரிந்தால் மதிப்பிற்குரிய ஐயாவின் மானத்தை காற்றில் பறக்கவிடவும் பெண்கள் தயங்குவதில்லை.