வீடியோ கான்ஃபரன்சில் மாஸ்க் அணிந்து பங்கேற்ற மோடி!

வீடியோ கான்ஃபரன்சில் மாஸ்க் அணிந்து பங்கேற்ற மோடி!

நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

இன்று மாநில முதல்வர்களுடன் நடந்த வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் பிரதமர் மோடி மாஸ்க் அணிந்திருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதனால், ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்னதாக பிரதமர் மோடி இன்று மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

modi-in-video-conference

இதில் பங்கேற்ற மோடி வீடியோ கான்ஃபரன்ஸாக இருந்தாலும் மாஸ்க் அணிந்து பங்கேற்றார். இதன் மூலம் கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகமாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

modi-with-mask-89

மோடியைப் போலவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பல மாநில முதல்வர்களும் மாஸ்க் அணிந்திருந்தனர். பிரதமர் மோடி வீடியோ கான்ஃபரன்ஸில் பங்கேற்றார், அவருக்கு அருகில் ஒரு சில அமைச்சர்கள், அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அதுவும் சமூக இடைவெளி அடிப்படையில் தள்ளித்தள்ளியே அமர்ந்திருந்தார். இந்த நிலையில் மாஸ்க் எல்லாம் தேவையா என்று எதிர்க்கட்சிகள் மோடியைக் கிண்டல் செய்து வருகின்றன. மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுபோன்ற செயல்கள் அவசியம் என்று பா.ஜ.க-வினர் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.