விஸ்வாசம் படத்தை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்!! 

 

விஸ்வாசம் படத்தை புகழ்ந்து தள்ளிய விக்னேஷ் சிவன்!! 

விஸ்வாசம் படம் பார்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்

சென்னை: விஸ்வாசம் படம் பார்த்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தல ரசிகர்கள், அவருக்கு பேனர்கள் வைத்து அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.மேலும் தல தரிசனத்திற்காகச் சிறப்பு காட்சிகளைக் காண நள்ளிரவு முதலே அவரது ரசிகர்கள் தியேட்டர்கள் முன் கூடிவிட்டனர். தல ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் திரைப்படம் ரசிக்க வைப்பதாகக் கூறப்படுகிறது. குடும்ப படமான ‘விஸ்வாசம்’திரைப்படத்தில் சண்டைக் காட்சிகளை காட்டிலும் செண்டிமெண்ட் காட்சிகள் ஏராளம் உள்ளது. விஸ்வாசம் படத்தை பார்த்த பின் பிரபலங்கள் பலர் தங்கள் கருத்துக்களையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவன் விஸ்வாசம் படம் பார்த்து ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார் அதில் “எமோஷனலான கதையம்சம் கொண்ட இப்படத்தை தந்த இயக்குனர் சிவாவையும், ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் இசையமைப்பாளர் இமான் ஆகியோரை வெகுவாக பாராட்டியுள்ளார். நடிகை நயன்தாராவின் ரோல் சிறப்பாக அமைந்தது என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.