‘விஸ்வாசம்’ கதை லீக்; தல ரசிகர்கள் அப்செட்!

 

‘விஸ்வாசம்’ கதை லீக்; தல ரசிகர்கள் அப்செட்!

தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் கதை இணையதளத்தில் கசிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ வரிசையில் 4வது முறையாக இயக்குநர் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

viswasam

இந்நிலையில், இப்படத்தின் கதை இணையதளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. தேனி பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் தூக்குதுரை(அஜித்), மருத்துவரான நிரஞ்சனாவை(நயன்தாரா) காதலித்து திருமணம் செய்துக் கொள்கிறார். ஊருக்கு ஒரு பிரச்னை என்றால் முன்னாடி வந்து நிற்கும் அஜித், தனது மனைவியின் பிரசவ நேரத்தில் ஒரு சண்டையில் சிக்கிக் கொள்கிறார். தாமதமாக அவர் மருத்துவமனைக்கு வர, அவர் மீது கோபப்பட்டுக் கொண்டு நயன்தாரா அவரை பிரிந்து செல்கிறார்.

viswasam

சில ஆண்டுகள் கழித்து தனது மனைவியை மும்பையில் பார்க்கிறார் அஜித், இறந்ததாக கூறப்பட்ட தனது மகள் விளையாட்டில் கெட்டிக்காரியாக இருப்பதை கண்டு மகிழ்கிறார். தனது மகளின் ஆசையை நிறைவேற்ற இடையூறாக இருக்கும் எதிரியை எதிர்க்கொண்டு மீண்டும் தனது குடும்பத்துடன் இணைகிறார் அஜித். மேலும், இந்த கதையில் குடும்ப பாசம் மட்டுமின்றி விவசாயம் குறித்தும் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

viswasam

‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் பாடல்கள், டிரைலர்களை கொண்டு பார்க்கையில் இந்த கதை உண்மையாக இருக்கலாம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.