விவசாயி பாடிய ‘ஜஸ்டின் பீபரின்’ பாடல்! வைரலாகும் வீடியோ!

விவசாயி பாடிய ‘ஜஸ்டின் பீபரின்’ பாடல்! வைரலாகும் வீடியோ!

இந்தியா முழுக்க விவசாயி என்றாலே துயரக்கதைகள்தான் அதிகம்! நமக்கு உணவு விளைவிக்கும் விவசாயிகளுக்கும் பொழுபோக்கு மிக அவசியமே! என்பதை உணர்த்தும் வகையில் இந்த வீடியோ உள்ளது! இணைக்கப்பட்டுள்ள வீடியோவை ‘க்ளிக்’ பண்ணிப் பாருங்க.. பதிவேற்றியவர் சொன்னது எவ்வளவு நிஜம் என்று.

நம் அனைவர்க்கும் தெரிந்த கனடிய பாடகர்  ஜஸ்டின் பீபர், இவரை தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள் அவ்வளவு ஃபேமஸ் அவரும் அவரது பாடல்களும், கர்நாடகத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர்,ஜஸ்டின் பீபரின் பாடலை பாடி அசத்தியுள்ளார்! அதுதான் இணையதளத்தில் இன்னைக்கு ட்ரெண்டிங்! 

ஜஸ்டின் பீபரின் “பேபி” எனும் பாடல் 2009-ல் ரிலீஸ் ஆன போதே உலகம் முழுக்க கொண்டாடித் தீர்த்தார்கள்.அவரது ரசிகர்கள்.10 வருடங்கள் கழித்து அந்தப் பாடலை நம்ம நாட்டைச் சேர்ந்த ஒருவர் பாடி மீண்டும் வைரல் ஆகியுள்ளது.

கர்நாடகாவை சேர்ந்த இந்த விவசாயி வயலில் வேலைசெய்து கொண்டிருக்கும்போது இந்த ‘பேபி’ பாடலை பாடியதை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலயத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ 3 நிமிடம் 10 செகண்டுகள் உள்ளது. அதை பதிவிட்டவர் ‘இந்த கர்நாடக விவசாயினின் ஜஸ்டின் பீபர் பாடலை கேளுங்கள், நீங்கள் அசந்துபோய்விடுவீர்கள்’என்று சப் டைட்டில் போட்டு இறக்கி விட்டதில் உள்ளூர் விவசாயி உலக அளவில் பாப்புலர் ஆகிட்டார். 