விவசாயியை வீட்டுக்கே சென்று சந்தித்த எஸ்.பி…அப்துல் கலாம் புத்தகம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்!

 

விவசாயியை வீட்டுக்கே சென்று சந்தித்த எஸ்.பி…அப்துல் கலாம் புத்தகம் வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம்!

ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளும் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விவசாயிகளும் விளைவித்த பொருட்களை விற்க முடியாமல் தவித்து வருகின்றனர்.  இந்த நிலையில், திருவள்ளூர் அகரம் கண்டிகை கிராமத்தில் வசித்து வரும் கார்த்திக், தனது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை எடுத்துக் கொண்டு கோயம்பேடு சந்தை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். வழியில் அவரை தடுத்துநிறுத்திய போலீசார், 2 மணி நேரம் அங்கேயே காக்க வைத்துள்ளனர். இதனால் கடுப்பான கார்த்திக் காய்கறிகளை ரோட்டிலேயே கொட்டி போராட்டம் நடத்தினார். இதனையடுத்து கார்த்திக்கை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். 

ttn

இந்த சம்பவத்திற்கு பிறகு, எஸ்.பி அரவிந்தன், கார்த்திக்கின் வீட்டுக்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார். மேலும், அவருக்கு 50 கிலோ அரிசி, 25 கிலோ காய்கறிகள் வழங்கிய எஸ்.பி அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் கொடுத்துள்ளார். அதே போல, அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தையும் விடுவித்திருக்கிறார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.