விவசாயிகளை வளையல் கொடுத்து வளைக்கிறார் -சந்திரபாபு நாயுடுவின் தந்திரம் – மாநில அரசியலில் மனைவி ….

 

விவசாயிகளை வளையல் கொடுத்து வளைக்கிறார் -சந்திரபாபு நாயுடுவின் தந்திரம் – மாநில அரசியலில் மனைவி ….

போராட்டம் நடத்தும் அமராவதி விவசாயிகளுக்கு  சந்திரபாபு நாயுடுவின் மனைவி தங்க வளையல்களை நன்கொடையாக வழங்கினார்
புகழ்பெற்ற நடிகரும், த.தே.கூ நிறுவனர் என் டி ராமராவ் அவர்களின் மகளுமான புவனேஸ்வரி, நாயுடு வுடன் அமராவதிக்கு வருகை தந்து எதிர்ப்பு தெரிவித்து போராடும்  விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்கு  தன் ஆதரவை  வெளிப்படுத்தினார்.

போராட்டம் நடத்தும் அமராவதி விவசாயிகளுக்கு  சந்திரபாபு நாயுடுவின் மனைவி தங்க வளையல்களை நன்கொடையாக வழங்கினார்
புகழ்பெற்ற நடிகரும், த.தே.கூ நிறுவனர் என் டி ராமராவ் அவர்களின் மகளுமான புவனேஸ்வரி, நாயுடு வுடன் அமராவதிக்கு வருகை தந்து எதிர்ப்பு தெரிவித்து போராடும்  விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்கு  தன் ஆதரவை  வெளிப்படுத்தினார்.
அமராவதியை தலைநகராகத் தொடரக் கோரி விவசாயிகள் மேற்கொண்டு வரும் இயக்கத்திற்கு ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் என் சந்திரபாபு நாயுடுவின் மனைவி என் புவனேஸ்வரி புதன்கிழமை தனது தங்க வளையல்களை வழங்கினார்.
தெலுங்கு தேசம் கட்சியின் (டி.டி.பி) தலைவரான நாயுடு, விவசாயிகள் தங்கள் எதிர்ப்புத் திட்டங்களுக்கு பணம் திரட்டுவதற்காக வளையல்களை ஏலம் விடுமாறு கேட்டுக்கொண்டார்.
புகழ்பெற்ற நடிகரும், த.தே.கூ நிறுவனர் மற்றும் முன்னாள் முதல்வருமான என் டி ராமராவ் அவர்களின் மகள் புவனேஸ்வரி, தனது கணவருடன் அமராவதி கிராமங்களுக்குச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைச் சந்தித்து அவர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்.

chandrababu-naidu

ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கத்தின் “மூன்று தலைநகர்”க்கு   எதிரான போராட்டத்தில் தொழிலதிபர் புவனேஸ்வரி அரிதாக வெளியே வந்து எதிர்ப்பை   வெளிப்படுத்தினார்.

குடும்பத்திற்கு சொந்தமான பால் நிறுவனமான ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்திற்கு தலைமை தாங்கும் புவனேஸ்வரி, பொதுவாக நாயுடுவுடன் கோவில்கள் அல்லது விசேஷங்களுக்குத்தான்  வருவார்.

“தலைநகருக்காக உங்கள் சாகுபடி நிலங்களை பிரித்து, ஒரு சிறந்த எதிர்காலத்தை எதிர்பார்த்து நீங்கள் அனைவரும் செய்த தியாகங்களை நாங்கள் அறிவோம். தலைநகரை இந்த இடத்திலிருந்து மாற்றுவதற்கு எதிரான உங்கள் போராட்டத்தில் எங்கள் குடும்பம் உங்களுடன் உள்ளது” என்று எர்ராபலேம் கிராமத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.

chandrababu-naidu-02

நாயுடு உருவாக்கிய  அமராவதியைப் பார்க்க தம்பதியினர் புத்தாண்டு தினத்தில் வந்தார்கள். கிளர்ச்சி செய்யும் விவசாயிகளுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த , த.தே.கூ தலைவரும் கட்சியும் புத்தாண்டு கொண்டாட்டங்களிலிருந்து விலகி இருந்தனர்.

தலைமை செயலகம் மற்றும் முதலமைச்சர் அலுவலகத்தை விசாகப்பட்டினத்துக்கு மாற்றுவது மட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தை கர்னூலுக்கு மாற்றுவதற்கான முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் முடிவுக்கு  எதிராக அமராவதியின்  அனைத்து 29 கிராமங்களிலும் உள்ள விவசாயிகள் 15 வது நாளாக தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் நாயுடு  விவசாயிகளிடம் தங்கள் போராட்டத்தை தைரியத்துடன் தொடரச் சொன்னார், ஜெகன் புலிவெண்டுலாவுக்கு (ஜெகனின் சொந்த நகரம்) தப்பி ஓட வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

ஜெகன்  தனது இல்லத்தில் இருந்து, அமராவதி கிராமங்கள் வழியாக தலைமை செயலகத்திற்கு செல்ல  மிகவும் பயப்படுவதாக நாயுடு கூறினார், ஒரு dummy  காவலரால் ஒத்திகை பார்த்த பின்னரே அவரது வாகனம்  செல்கிறது. “விரைவில், அவர் தனது வீட்டிற்கு பாதுகாப்பு  வேலி போட வேண்டிய நாள் வரும்,” என்று அவர் கூறினார்.