விவசாயிகளுக்கு பாக்கி தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் சர்க்கரை ஆலைகள்! பா.ஜ. ஆளும் உத்தர பிரதேசம் முதலிடம்

 

விவசாயிகளுக்கு பாக்கி தொகையை கொடுக்காமல் இழுத்தடிக்கும் சர்க்கரை ஆலைகள்! பா.ஜ. ஆளும் உத்தர பிரதேசம் முதலிடம்

சர்க்கரை ஆலைகள் சுமார் ரூ.19 ஆயிரம் கோடியை விவசாயிகளுக்கு வழங்காமல் இழுத்தடித்து வருகின்றன. இதில் பா.ஜ. ஆளும் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆலைகள்தான் முதல் இடத்தில் உள்ளன.

இந்தியாவில் சர்க்கரை உற்பத்தியில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முன்னணயில் உள்ன. பீகார், குஜராத், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கணிசமான அளவில் சர்க்கரை நடைபெறுகிறது. விவசாயிகளிடமிருந்து கரும்பை வாங்கும் ஆலைகள் அதற்கான தொகையை உடனடியாக கொடுக்காமல் பாக்கி வைத்துள்ளன. பாக்கி தொகையை ஆலைகளிடமிருந்து வாங்கி தரும்படி விவசாயிகள் அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

சர்க்கரை ஆலை

இருப்பினும், சர்க்கரை ஆலைகள் பாக்கி தொகையை கொடுக்காமல் வைத்துள்ளன. இந்த விவகாரத்தில் சர்க்கரை ஆலைகள் மீதுதான் மொத்த தவறும் என்று சொல்லி விட முடியாது. தற்போது சர்க்கரை உற்பத்தி உபரியாக உள்ளதால் விலை வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகளின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகளால் விவசாயிகளுக்கு பாக்கி தொகையை முழுமையாக கொடுக்க முடியவில்லை. இருப்பினும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் பாக்கி தொகையை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து வருகின்றன.

 

அண்மையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கி தொகை ரூ.18,958  கோடியாக உள்ளது. இதில், உத்தர பிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் அதிகபட்சமாக  ரூ.11,082 கோடி பாக்கி வைத்துள்ளன. அடுத்து கர்நாடக சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு ரூ.1,704 கோடி கொடுக்க வேண்டும். மகாராஷ்டிரா மாநில சர்க்கரை ஆலைகள் ரூ.1,338 கோடி பாக்கி தொகையை வழங்காமல் உள்ளன.

பணம்

பஞ்சாப் (ரூ.989 கோடி), குஜராத் (ரூ.965 கோடி), பீகார் (ரூ.923 கோடி) ஆகிய மாநிலங்களில் இயங்கி வரும் சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ளன.