விவசாயிகளுக்கு கடன் வழங்க நிதி உதவி… நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! – விவசாயிகள், தொழிலாளர்கள் வேதனை

விவசாயிகளுக்கு கடன் வழங்க நிதி உதவி… நிர்மலா சீதாராமன் அறிவிப்பு! – விவசாயிகள், தொழிலாளர்கள் வேதனை

விவசாயிகள், தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருளாதார உதவிகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், கடன் வாங்குங்கள், கடன் வாங்கினால் மூன்றுமாதம் இ.எம்.ஐ கட்ட சலுகை வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இரண்டாவது நாளாக பொருளாதார அறிவிப்புக்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். அப்போது அவர், “ஊரக கிராமப்பு வங்கிகளுக்கு நபார்டு மூலம் ரூ.29,500 கோடி கடனுதவி அளிக்கப்படும். கடந்த இரண்டு மாதங்களில் 25 லட்சம் கிசான் கடன் கட்டடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 25 லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக கடன் அட்டைகள் வழங்கப்படும். விளைபொருள் கொள்முதலுக்கு ரூ.6700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்கான வட்டி மே 31ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், மானிய விலையில் தந்த கடனுக்கான வட்டியை செலுத்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

farmers-789

கிராமப்புற அடிப்படை கட்டமைப்பு தொழில்களுக்கு ரூ.4200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து தொழில்கள், வேலைகளில் பெண்கள் ஈடுபட அனுமதி வழங்கப்படுகிறது. பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வசதியை ஏற்படுத்திக் கொடுத்து இரவு பணியிலும் ஈடுபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 1.87 லட்சம் கிராமங்களில் 2.33 கோடி பேருக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தை ஒப்பிடுகையில் 40 முதல் 50 சதவீதம் பேருக்கு கூடுதலாக ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.

100-days-work

ஊரடங்கு காலத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ஊதியமாக ரூ.10,000 கோடி வழங்கப்பட்டுள்ளது; புலம் பெயர் தொழிலாளர்களுக்கு தங்கும் முகாம் அமைக்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் சராசரி ஊதியம் ரூ.182ல் இருந்து இந்த ஆண்டு ரூ.202ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களுக்கும் பொருந்தும் வகையில் குறைந்தபட்ச கூலி சட்டம் திருத்தப்படும்” என்று கூறியுள்ளார்.