விவசாயமே வேண்டாம் என்று கட்டிட வேலைக்குப் போனவர்… இயற்கை விவசாயத்தில் சாதித்தார்!

 

விவசாயமே வேண்டாம் என்று கட்டிட வேலைக்குப் போனவர்… இயற்கை விவசாயத்தில் சாதித்தார்!

வறுமை காரணமாக சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்கு சென்ற விவசாயி, நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆலோசனையில் ஈர்க்கப்பட்டு மீண்டும் விவசாயத்துக்குத் திரும்பி சாதித்துக் காட்டியது பாராட்டைப் பெற்று வருகிறது.

வறுமை காரணமாக சிங்கப்பூருக்கு கட்டிட வேலைக்கு சென்ற விவசாயி, நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆலோசனையில் ஈர்க்கப்பட்டு மீண்டும் விவசாயத்துக்குத் திரும்பி சாதித்துக் காட்டியது பாராட்டைப் பெற்று வருகிறது.

naam

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள உலகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். தன்னுடைய 10 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் ஒன்பது வகையான பாரம்பரிய நெல் வகைகளை விளைவித்து சாதனை புரிந்துள்ளார். சம்பா, காட்டு யானை, கருடன் சம்பா, செம்புழுதி சம்பா, ஆத்தூர் கிச்சடி சம்பா, தூயமல்லி, குளவாழை, கருப்பு மற்றும் சிவப்பு கவுனி, சீரக சம்பா என ஒன்பது வகையான நெல்கள் அறுவடைக்கு தயாராக இருந்தது. இதையொட்டி விவசாய ஆர்வலர்கள், நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்களை அழைத்து அறுவடைத் திருவிழாவை நடத்தியுள்ளார்.

naam

இது குறித்து சிவராமன் கூறுகையில், “எங்கள் குடும்பம் பாரம்பரிய விவசாய குடும்பம். போதுமான மழை இல்லை, தண்ணீர் பற்றாக்குறை, வறட்சி காரணமாக தொடர்ந்து விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால், 2007ம் ஆண்ட சிங்கப்பூருக்கு கட்டிடத் தொழிலாளியாக சென்றேன். மறைந்த நம்மாழ்வார் உள்ளிட்டவர்களின் பேச்சுக்களைக் கேட்டபோது ஒரு நம்பிக்கை வந்தது. இதனால், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து திரும்பி மீண்டும் விவசாயம் செய்ய ஆரம்பித்தேன்.

naam

நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோரின் ஆலோசனை படி இயற்கை விவசாயம், இயற்கை பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய ஆரம்பித்தேன். நெல் ஜெயராமனிடமிருந்து பாரம்பரிய அரிசி ரகங்களை வாங்கி விளைவித்தேன். பாரம்பரிய ரகங்களில் பூச்சி தாக்குதல் குறைவாக உள்ளது. நல்ல விளைச்சலும் கிடைத்தது. இதனால், குறைவான செலவில் நல்ல லாபம் கிடைத்தது. தற்போது நானும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

naam

விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி வரும் சிவராமனுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.