விவசாயத்தை மறந்து விட்டது கவலையளிக்கிறது: நடிகர் கார்த்தி வேதனை!

 

விவசாயத்தை மறந்து விட்டது கவலையளிக்கிறது: நடிகர் கார்த்தி வேதனை!

பசி தீர்க்கும் விவசாயிகளை மதிப்புடன் நடத்துவதோடு, விவசாயத்தை மேற்கொள்ள, இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

ஈரோடு: பசி தீர்க்கும் விவசாயிகளை மதிப்புடன் நடத்துவதோடு, விவசாயத்தை மேற்கொள்ள, இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் என நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

நடிகர் கார்த்தி விவசாயத்தை மையமாக கொண்டு உருவான கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்திருந்தார், இதையடுத்து விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஈர்ப்பால் சமீபத்தில்  ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் மூலம் விவசாயிகள் உதவ போவதாக அவர் அறிவித்திருந்தார். இந்த அறக்கட்டளைக்கு  சூர்யா ரூ.1 கோடி நிதியாக வழங்கினார்.

karthi

இந்நிலையில் ஈரோட்டில், சக்தி மசாலா நிறுவனத்தின், சக்திதேவி அறக்கட்டளையின் சார்பில், ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உதவி தொகைகளை வழங்கி பேசிய நடிகர் கார்த்தி, ‘நாட்டில்  அதிகப்படியான வேலை வாய்ப்பை தரும் தொழில் விவசாயமாக இருந்தாலும், அதை மறந்து விட்டது கவலையளிக்கிறது. நமது மூத்தோர்களிடம் உள்ள விவசாய நுணுக்கங்களை, அவர்கள் இருக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும், விவசாயத்தை அனைவரும் காக்க வேண்டும்’ என்றார்.