விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு!

 

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ஒரு நாள் முழு ஊரடங்கு!

கொரோனா பாதிப்பைத் தவிர்க்க ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துவருகிறது. இந்த நிலையில் முன்னறிவிப்பு ஏதும் இன்றி நாளை ஒருநாள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு

இதனால், மருந்தகம், மருத்துவமனை தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன. காய்கறி, மளிகைக்கடைகள், இறைச்சிக் கடைகள்  திறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு ஏற்கனவே அறிவித்திருந்தால் முன்கூட்டியே மக்கள் பொருட்கள் வாங்கி வைத்திருப்பார்கள். ஆனால், மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் மூடப்பட்ட பிறகு இந்த முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.