விழுப்புரம் மருத்துவமனையிலிருந்து தப்பித்த கொரோனா நோயாளி சென்னையில் கைது!

 

விழுப்புரம் மருத்துவமனையிலிருந்து தப்பித்த கொரோனா நோயாளி சென்னையில் கைது!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மக்களிடையே பீதியை உண்டு பண்ணியுள்ளது. மேலும் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் 1200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதுடன் 12பேர் உயிரிழந்துள்ளனர். 

coronavirus

இந்நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆறாம் தேதி அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிக்கு கொரோனா இல்லை என 8 ஆம் தேதி இரவு விடுவிக்கப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த இவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. அதிகாரிகள் கவனக்குறைவால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனை நிர்வாகம் விடுவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் காணாமல்போன நோயாளியை விழுப்புரம் மாவட்ட போலீசார், 3 தனிப்படை அமைத்து  விழுப்புரம் முதல் சென்னை வரை 3 மொழிகளில் போஸ்டர் ஒட்டி தேடி வந்தனர். இந்நிலையில் செங்கல்பட்டு அருகே படாலம் பகுதியில் விழுப்புரம் போலீசார் அவரை சுற்றிவளைத்தனர்.