விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

 

விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு!

இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200ஐ எட்டியுள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்னும் பரிசோதனையின் முடிவு வருவதற்குள் பலர் உயிரிழந்து விடுகின்றனர். அதனால் தான், கொரோனா பாதிப்பு இருப்பதை உடனடியாக தெரிந்து கொள்ள ரேபிட் டெஸ்ட் கருவி வரவழைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. 

ttn

இந்நிலையில், விழுப்புரத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார். பாணாம்பட்டு பகுதியை சேர்ந்த 55 வயதான அந்த முதியவருக்கு காய்ச்சல் இருந்ததால், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் நேற்று அவர் உயிரிழந்துள்ளார்.  அவருக்கு இன்னும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்படாததால், அவரது உடலை கொரோனா நோய்க்கான வழிகாட்டுதல் படி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த முதியவரின் ரத்த மாதிரி சோதனை முடிவு இதுவரை வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.