விளையாட்டுத்துறைக்கான தேசிய விருதுகள்! யாருக்கு என்ன விருது?

 

விளையாட்டுத்துறைக்கான தேசிய விருதுகள்! யாருக்கு என்ன விருது?

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழாவில் சாதனைப்படைத்த வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை படைத்து கெளரவித்தார். 

சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கான தேசிய விருது வழங்கும் விழாவில் சாதனைப்படைத்த வீரர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை படைத்து கெளரவித்தார். 

ramananth

தமிழகத்தை சேர்ந்த பாடிபில்டர் பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதை வழங்கப்பட்டது. பாஸ்கரனுக்கு அர்ஜூனா விருதுடன் ரூ.5 லட்சத்திற்கான பரிசுத் தொகையை  குடியரசுத் தலைவர் வழங்கினார். 

மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 

winners

இதேபோல் பாரா தடகள வீராங்கனை தீபா மாலிக்கிற்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. 

இதேபோல் அர்ஜூனா விருதை 19 வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். வீரர்களின் பட்டியல்…. 

1. தஜிந்தேர் சிங்- தடகளம்
2. முகமது அனாஸ் – தடகளம்
3. பாஸ்கரன் – பாடிபில்டிங்
4. சோனியா லாதர்- குத்துச்சண்டை
5. ரவீந்திர ஜடேஜா- கிரிக்கெட்
6. சிங்லென்சனா சிங் – ஹாக்கி
7. அஜய் தாக்கூர்- கபடி
8. கவுரவ் சிங் – மோட்டார் விளையாட்டு9. ப்ரமோத் பகத்- பேட்மின்டன் (பாரா விளையாட்டு)
10. அஞ்சும் மோட்கில் – துப்பாக்கிச்சுடுதல்

winners

11. ஹர்மீத் ரஜுல் தேசாய் – டேபிள் டென்னிஸ்
12. பூஜா தண்டா – மல்யுத்தம்
13. ஃபவுத் மிர்சா – குதிரைச்சவாரி
14. குர்பீத் சிங் – கால்பந்து
15. பூனம் யாதவ் – கிரிக்கெட்
16. ஸ்வப்னா பர்மன் – தடகளம்
17. சுந்தர் சிங் – தடகளம் (பாரா விளையாட்டு)
18. பாமிதிபடி சாய் ப்ரனித் – பேட்மின்டன்
19. சிம்ரன் சிங் – போலோ