வில்லாதி வில்லனாக நடிக்கும் தளபதி: சர்காரில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

 

வில்லாதி வில்லனாக நடிக்கும் தளபதி: சர்காரில் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

’சர்கார்’ திரைப்படத்தில் தளபதி விஜய் வில்லாதி வில்லனாக நடித்திருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை: ’சர்கார்’ திரைப்படத்தில் தளபதி விஜய் வில்லாதி வில்லனாக நடித்திருப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் நவ.6ம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், சர்கார் படம் குறித்த சுவாரஸிய தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ‘மெர்சல்’ படத்தின் ரிலீசுக்கு முன்பே சர்கார் கதையை கூறிவிட்டேன். மெர்சலில் அரசியல் ரீதியாக சர்ச்சைகள் இருந்தபோது, அது குறித்து யோசிக்க சொன்னார் விஜய். இந்த ஸ்க்ரிப்ட் ஓகேவா இல்ல வேற பண்ணலாமா என்றார். இது இப்போதைக்கு தேவையான படம் சார் என்றதும் ஓகே சொல்லிட்டார். சராசரி குடிமகனாக சர்கார் குறித்து கேள்வி எழுப்பும் விதமாக அமைந்துள்ளது என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

vijay

பாமர மக்கள் தங்களது வாக்குகளை பணத்துடன் ஒப்பிடுவது வியப்பாக இருந்ததாகவும். அங்கிருந்து தான் ஊழல் வளர்கிறது. நாட்டில் ஊழல் அதிகரிக்க சராசரி மக்களாகிய நாம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை  உணர்ந்து, அதை வைத்து தான் இந்த ‘சர்கார்’ கதையை உருவாக்கினேன் என்றார்.

கார்ப்ரேட் கிங்காக வெளிநாட்டில் இருந்து வருவதால் விஜய்-க்கு மாஸ் தானாகவே அமைந்துவிட்டது. இந்த படத்தில் சுந்தர் கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார். இது கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை முன் மாதிரியாக வைத்து விஜய்யின் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பை மாற்ற முற்படும் கற்பனை கதையே சர்கார். இதில் எந்த அரசியல் கட்சி, தலைவர் குறித்த விமர்சனங்கள் இல்லை.

கார்ப்ரேட் நிறுவன சிஇஓ-வாக கதைக்குள் வரும் விஜய் வில்லனாக தான் கதைக்குள் பயணித்து பின் ஹீரோவாக நடித்திருக்கிறார். முன்னதாக படத்திற்கு ‘வில்லாதி வில்லன்’ என்று தலைப்பிட்டிருந்தேன். கீர்த்தி சுரேஷ், வரலக்ஷ்மிக்கும் நல்ல ரோல் இருக்கிறது.