விலகி இருந்து கொரோனாவை அழிக்கப் போகிறோமோ, இணைந்து அழியப்போகிறோமா? – மக்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

விலகி இருந்து கொரோனாவை அழிக்கப் போகிறோமோ, இணைந்து அழியப்போகிறோமா? – மக்களுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மக்கள் மதிப்பது குறைந்துகொண்டே வருகிறது. சாலைகளில் நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டம் கூடத் தொடங்கியுள்ளது. இதனால், கொரோனா பரவுதல் அதிகரிக்கும் என்று எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களை எச்சரிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

ஊரடங்கை கடைபிடித்து கொரோனாவை அழிக்கப் போகிறோமா அல்லது கொரோனவுடன் இணைந்து அழியப் போகிறோமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கை மக்கள் மதிப்பது குறைந்துகொண்டே வருகிறது. சாலைகளில் நெருக்கடி ஏற்படும் அளவுக்கு கூட்டம் கூடத் தொடங்கியுள்ளது. இதனால், கொரோனா பரவுதல் அதிகரிக்கும் என்று எச்சரக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்களை எச்சரிக்கும் வகையில் டாக்டர் ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

koyambedu-market-67

அதில், “கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கை மக்கள் கடைப்பிடிப்பது முக்கியம். ஆனால், அதை கடைபிடிக்க மறுத்தால் என்ன செய்வது? விலகி இருந்து கொரோனாவை நாம் ஒழிக்கப் போகிறோமா? அல்லது கொரோனாவுடன் இணைந்து இருந்து நாம் அழியப் போகிறோமா? மக்களே சொல்லுங்கள்!

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனாவை ஒழிக்கும் முயற்சியில் இப்போது கூட காலம் கடந்து விடவில்லை. இன்று தொடங்கி இனி வரும் நாட்களில் ஊரடங்கை நாம் முழுமையாக கடைபிடிப்போம்… கொரோனாவை விரட்டியடிப்போம்!” என்று கூறியுள்ளார்.

மருத்துவர்களை தாக்கினால் தண்டனை என்று கொண்டுவரப்பட்டுள்ள அவசர சட்டத்துக்கு நன்றி தெரிவித்து மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார் ராமதாஸ். அதில், “கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவப் பணியாளர்களை தாக்குவோருக்கு  ரூ.5 லட்சம் வரை அபராதம், 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது. மருத்துவர்களை மதிக்க வேண்டும்; காக்க வேண்டும்!” என்று கூறியுள்ளார்.