விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்!

 

விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக்!

சன்ஸாரு கேம்ஸ்.இன்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக் கைப்பற்றியுள்ளது.

நியூயார்க்: சன்ஸாரு கேம்ஸ்.இன்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு சுமார் 2.3 பில்லியன் டாலருக்கு ஆக்குலஸ் வி.ஆர் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றியது. இந்த நிலையில், ஆக்குலஸ் வி.ஆர் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் வகையில் தற்போது சன்ஸாரு கேம்ஸ்.இன்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் நிறுவனத்தை வாங்கிய பேஸ்புக் கைப்பற்றியுள்ளது. 2019-ஆம் ஆண்டின் சிறந்த விர்ச்சுவல் ரியாலிட்டி கேம் என்ற பெருமையை அஸ்கார்ட்ஸ் ராத் என்ற கேம் பெற்றது. இந்த கேமை உருவாக்கியது சன்ஸாரு கேம்ஸ்.இன்க் நிறுவனமாகும்.

ttn

இந்த இணைப்பு குறித்து சன்ஸாரு கேம்ஸ்.இன்க் நிறுவனம் தரப்பில் கூறுகையில், “ஆக்குலஸ் வி.ஆர் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. இவ்விரு நிறுவனங்களும் இணைந்து அட்டகாசமான விர்ச்சுவல் ரியாலிட்டி கேம்களை உருவாக்குவோம்” என்று கூறப்பட்டது. சன்ஸாரு நிறுவனத்தின் பெரும்பான்மையானவர்கள் ஆக்குலஸ் ஸ்டுடியோஸ் அணியில் சேருவார்கள் என்று பேஸ்புக் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.