விரைவில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் !

 

விரைவில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி : அமைச்சர் செங்கோட்டையன் தகவல் !

, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை எதிர்த்து வரும் கருத்துக்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு கட்டாயமாகப் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கம் ஒன்று உள்ளது. அதில் இன்று தமிழர் திலகம் பத்திரிகையின் 2 ஆம் ஆண்டு துவக்க விழா நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

ttn

அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் , 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தங்கு தடையின்றி ஆங்கிலம் பேச வாரந்தோறும் 45 நிமிட பயிற்சி வகுப்புகள் அளிக்க முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும், விடுமுறை நாட்களில் தமிழ் ஆசிரியர்களை வைத்து தமிழ் பயிற்சி மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்த முடிவு செய்யப் பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

ttn

அதனைத்தொடர்ந்து, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வை எதிர்த்து வரும் கருத்துக்கள் அனைத்தும் அடுத்த ஆண்டு பரிசீலிக்கப்படும் என்றும் இந்த ஆண்டு கட்டாயமாகப் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.