விரும்பியதை தேடிப்பார்க்கும் மக்களுக்கு சென்சார் எதற்கு?; ராதிகா ஆப்தே

 

விரும்பியதை தேடிப்பார்க்கும் மக்களுக்கு சென்சார் எதற்கு?; ராதிகா ஆப்தே

நிர்வாண காட்சியில் நடித்தது அசிங்கமாக இல்லையா என்ற தொனியில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு, தன் உடலை அசிங்கமாக நினைப்பவர்களுக்குதான் நிர்வாணம் அசிங்கமாக தெரியும். நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என்றார்.

வெப் சீரிஸ்க்கு சென்சார் அவசியமற்றது, மக்கள் தாங்கள் விருப்பியதை தேடிப்போய் பார்க்கதான் செய்வார்கள் என ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, கபாலி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. பிற நடிகைகள் எடுக்கத் துணியாத கதாபாத்திரங்களை ஏற்று தைரியமாக நடிக்கக் கூடியவர்.

rAD

பார்ச்ட் என்ற படத்தில் நிர்வாண காட்சியில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் ராதிகா ஆப்தே. அப்போது அந்த நிர்வாண காட்சி குறித்து நக்கலாக கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு அவர் பதிலடி கொடுத்தது பெரும் வரவேற்பை பெற்றது.

par

நிர்வாண காட்சியில் நடித்தது அசிங்கமாக இல்லையா என்ற தொனியில் கேள்வி எழுப்பிய பத்திரிகையாளருக்கு, தன் உடலை அசிங்கமாக நினைப்பவர்களுக்குதான் நிர்வாணம் அசிங்கமாக தெரியும். நிர்வாண உடலை பார்க்க வேண்டுமானால் என் படக் காட்சிக்கு பதிலாக கண்ணாடி முன் நின்று உங்களை பாருங்கள் என்றார். உடல் பற்றிய தெளிவான புரிதலோடு அவர் பேசியதற்கு பாராட்டுகள் குவிந்தது. ஆனால் பலருக்கும் அவர் சர்ச்சை நாயகியாகவே தெரிகிறார்.

aga

முன்புபோல் இல்லாமல் தற்போதுதான் பெண்கள் சமூக வலைதளங்களில் கொஞ்சம் சுதந்திரமாக செயல்பட முடிகிறது. பாலியல் கல்வியின் அவசியத்தை பற்றி சமூக ஆர்வலர்கள் பலரும் எடுத்துரைத்து வருகின்றனர். இந்நிலையில் வெப் சீரிஸ்க்கு சென்சார் அவசியமாக என ஒரு பேட்டியில் ராதிகா ஆப்தேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர், வெப் சீரிஸ்க்கு சென்சார் அவசியமற்றது. மக்கள் தாங்கள் விரும்பியதை எப்படியும் தேடிப்போய் பார்க்கதான் போகிறார்கள் என பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஸ்டார்ட் கேமரா ஆக்சன்; இயக்குநர் ஐஸ்வர்யா ராய்?!