விருந்து கொடுப்பது போல மருந்து கொடுத்த மருத்துவருக்கு -2 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தனர் ..

விருந்து கொடுப்பது போல மருந்து கொடுத்த மருத்துவருக்கு -2 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தனர் ..

மருத்துவ தொழிலில் மோசடி செய்ததாக அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த 
56 வயதான மருத்துவர் கைன் குமார், கலிபோர்னியாவின் மத்திய மாவட்டநீதிமன்றத்தால்  2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார் மேலும்  ஒரு மில்லியன் டாலர் அபராதம் கட்டவும்  அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பலதரப்பட்ட சுகாதாரப் பாதுகாப்பு மோசடித் திட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், ஆயிரக்கணக்கான ஓபியாய்டு வலி நிவாரணி மருந்துகள் மற்றும் Muscle relaxers களை  சட்டவிரோதமாக பரிந்துரைத்ததற்காகவும்இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு மருத்துவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும்  ஒரு மில்லியன் டாலர்களுக்கு அபராதம் விதித்து  உத்தரவிடப்பட்டுள்ளது.
குமார் 2019 ஏப்ரலில் தான்  மருத்துவ  மோசடி செய்ததையும்  ஹைட்ரோகோடோன் விநியோகம் செய்த  குற்றத்தையும்  ஒப்புக்கொண்டார்..
மருத்துவ ரீதியாக அவசியமில்லாத மருந்துகளை நோயாளிகளுக்கு கொடுத்ததை  குமார் ஒப்புக் கொண்டார்.

பிப்ரவரி 2013 முதல் ஜனவரி 2016 வரை, ஓபியாய்டு ஹைட்ரோகோடோனின் 50000க்கும் மேற்பட்ட  மாத்திரைகளை முறையான மருத்துவ நோக்கம் இல்லாமல் பரிந்துரைத்ததாக குமார் ஒப்புக்கொண்டார்.
குமார் நோயாளிகளை பரிசோதிக்காமலே , நோயாளிகளுக்கு இந்த  மருந்துகளை வழங்குமாறு குமார் தனது அலுவலக ஊழியர்களுக்கு  உத்தரவிட்டார்.

ஓபியாய்டு மருந்துகளை வழங்குமாறு குமார் தனது அலுவலக ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார், குமாரின் பெயரை மருந்துசீட்டுகளில்  கையெழுத்திடுமாறு தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியதன் மூலமும், தனது ஊழியர்களுக்கு முன்பே கையொப்பமிடப்பட்ட மருந்துகளை வழங்கியதாகவும், மருத்துவ பரிசோதனைக்கு நோயாளியைப் பார்க்காமலே ஹைட்ரோகோடோன் மற்றும் கேரிசோபிரோடோலுக்கான மருந்துகளை நோயாளிக்கு வழங்கியதாகவும் அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது .