விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி!

 

விருதுநகரில் பட்டாசு தொழிற்சாலைகள் செயல்பட அனுமதி!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 20ம் தேதிக்குப் பிறகு நிபந்தனைகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும் என்றும் கூறியிருந்தார். ஊரடங்குக்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டது. இதன்படி, ஏப்ரல் 20ம் தேதிக்குப் பிறகு சமூக இடைவெளி உள்ளிட்ட நிபந்தனைகளைப் பின்பற்றி மக்கள் நெருக்கம் குறைவான தொலைதூரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள், சிறப்புப் பொருளாதார மண்டங்களில் உள்ள நிறுவனங்கள், தொழிற்பேட்டைகளில் உள்ள நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழில் ஆலைகள் 20ம் தேதி முதல் 50% தொழிலாளர்களுடன் இயங்கலாம் என ஆட்சியர் கண்ணன் தெரிவித்துள்ளார்.  சிவகாசி, சாத்தூர், உள்ளிட்ட விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 956 பட்டாசு ஆலைகள்  கடந்த 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ள நிலையில் வரும் 20ஆம் தேதி முதல் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் திறந்து பட்டாசு உற்பத்தியை தொடங்க மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் 50சதவீத தொழிலாளர்களை மட்டுமே பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.